Jio vs Airtel vs Vodafone: Best Prepaid Recharge Plans Under Rs 200 : ஏர்டெல், ரிலையன்ஸ், மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் ப்ளான்கள் குறித்து ஒரு பார்வை. ரூ. 200க்கும் குறைவான பட்ஜெட்டில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் இந்த திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டம் (Reliance Jio Rs 149 prepaid recharge plan)
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 149க்கான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறாது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒரு வாடிக்கையாளர் மற்றோரு ஜியோ பயனாளரிடம் அன்லிமிட்டட் கால்கள் பேசிக் கொள்ளலாம். மேலும் இதர நெட்வொர்க் வாடிக்கையாளர்களிடம் 300 இலவச நிமிடங்கள் பேசிக் கொள்லலாம். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும், 4ஜி வேகத்தில் 1.5ஜிபி டேட்டாவையும் பெற்றிடலாம். இதன் வேலிடிட்டி 24 நாட்களாகும். இதனுடன் ஜியோ செயலிகளின் காம்ப்ளிமெண்ட்ரி ஆஃபர்களும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ. 199, ரூ. 169 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் ரூ.199க்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் இன்றுக்கு ரூ. 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நாள் ஒன்றுக்கு 100 இலவச மெசேஜ்களை நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். ரூ. 169க்கான ரீசார்ஜ் திட்டமும் ரூ. 199 வழங்கும் அதே சலுகைகளை வழங்குகிறது. நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் ஏர்டெலின் பல்வேறு ஆப்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வோடஃபோன் ரூ. 199 , ரூ. 169 ரீசார்ஜ் திட்டங்கள்
வோடஃபோன் நிறுவனம் ரூ.199 திட்டத்தின் கீழ் 1.5ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை நீங்கள் அனுப்பலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். வோடஃபோன் நிறுவனம் ரூ. 169க்கான திட்டத்தையும் வழங்குகிறது. நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். மேலும் 28 நாட்களுக்கு இதன் வேலிடிட்டி இருக்கும். வாடிக்கையாளர்கள் 1ஜிபி டேட்டாவை தினமும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : இப்படியொரு ஆஃபர் கொடுத்தா வேறு எங்க போக முடியும்! அதிரடி காட்டும் ஏர்டெல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.