ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வரை தரும் ப்ரீபெய்ட் ப்ளான்கள் என்னென்ன?

வோடஃபோனின் மற்றொரு ரூ. 699க்கான பேக்கின் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதிலும் நீங்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Jio vs Airtel vs Vodafone prepaid plans offer 2GB data
Jio vs Airtel vs Vodafone prepaid plans offer 2GB data

Jio vs Airtel vs Vodafone prepaid plans offer 2GB data daily : ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வரை தரும் ப்ரீபெய்ட் ப்ளான்கள் என்னென்ன என்ற தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது இந்த செய்தி தொகுப்பு.  ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களில் எந்த நிறுவனம் சிறந்த சேவைகளை வழங்குகிறது என்பதை நாம் தினம் தோறும் பார்த்து வருகின்றோம். தற்போது நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாக்களை தரும் பேக்குகள் எவையெவை என்பதை நாம் இங்கே காண்போம்.

ஏர்டெல் நிறுவனத்தின் 2ஜிபி பேக்குகள்

ரூ. 298க்கு ஒரு பேக்கினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். இந்த பேக்கின் வேலிடிட்டி 28 நாட்களாகும். மேலும் ஷா அக்காடமியின் கோர்ஸ் ஒன்றை இலவசமாக வழங்குகிறது ஏர்டெல். மேலும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் மற்றும் வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் ப்ரீமியம் போன்ற சலுகைகளை இந்த பேக் வழங்குகிறது.

ரூ. 349க்கு மற்றொரு ப்ளானை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கில் 2ஜிபி டேட்டாவை நாள் ஒன்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 28 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் ஆகியாவற்றை பயன்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும்.

ஏர்டெலின் ரூ. 449க்கான ப்ரீபெய்ட் ப்ளானில் 56 நாட்கள் வேலிடிட்டியும் ஷா அக்காடமியின் இலவச கோர்ஸ், விங்க் மியூசிக், மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்ற ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ. 698க்கான ப்ரீபெய்ட் ப்ளானில் 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பெறுவதோடு மட்டுமின்றி பல்வேறு சிறப்பு சலுகைகளையும் ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது.

Reliance Jio prepaid plan with daily 2GB data

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் 2ஜிபி ப்ரீபெய்ட் பேக்குகள் ஒரு பார்வை. இந்த அனைத்து ப்ளான்களும் 100 இலவச எஸ்.எம்.எஸ்களை ஒரு நாளைக்கு பயன்படுத்த தருகிறது. மேலும் ஆன் நெட் காலிங் மூலமாக இலவசமாக நீங்கள் ஜியோ நெட்வொர்க்கில் எந்த எண்ணுடனும் பேசிக் கொள்ளலாம்.

ரூ. 249க்கு வழங்கப்படும் இந்த ப்ளானில் 2ஜிபி டேட்டாவை ஒருவர் நாள் ஒன்றுக்கு என 28 நாட்கள் பெற்றுக் கொள்ள முடியும். 1000 இலவசமாக நான்-ஜியொ எண்களில் பேசிக் கொள்ள இயலும். ரூ. 444க்கு வழங்கப்படும் பேக்கின் வேலிடிட்டி 56 நாட்களாகும். இதில் 2000 FUP நிமிடங்கள் வெறொரு நெட்வொர்க்கில் பேசிக் கொள்ளலாம். ரூ. 599க்கு வழங்கப்படும் பேக்கில் 3000 இலவச நிமிடங்கள் இதர நெட்வொர்க்கில் பேசிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும்.

வோடஃபோன் நிறுவனத்தின் பேக்குகள் என்னென்ன?

வோடஃபோன் நிறுவனம் வழங்கும் சில டேட்டாக்களை பார்ப்போம். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள இயலும். மேலும் இத்துடன் வோடஃபோன் ப்ளே சப்ஸ்கிரிப்சன் மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படும். ரூ. 449க்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் இதே போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வேலிடிட்டி 56 நாட்களாகும். வோடஃபோனின் மற்றொரு ரூ. 699க்கான பேக்கின் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதிலும் நீங்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : பிப்ரவரி 6 தான்… இதற்கு மேலே தள்ளிப்போட இயலாது! மோட்டோவின் இறுதி அறிவிப்பு

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio vs airtel vs vodafone prepaid plans offer 2gb data daily

Next Story
செவ்வாயில் தரையிறங்குமா சீனாவின் செயற்கைக் கோள்?China to launch its first Mars probe mission
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com