Advertisment

தினமும் 2 ஜிபி டேட்டா: ஜியோ vs ஏர்டெல் vs வி.ஐ; எந்த ப்ரீபெயட் பிளான் பெஸ்ட்?

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெயட் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் எந்த திட்டம் சிறந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel-vs-Jio-vs-Vodafone-Idea

Airtel-vs-Jio-vs-Vodafone-Idea

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு ஜியோ, ஏர்டெல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. 3 நிறுவனங்களும் பயனர்களுக்கு அன்லிமிடெட் திட்டங்களை வழங்ககின்றன. பயனர்களின் வசதிக்கு ஏற்ப வேலிடிட்டி நாட்கள் பொருத்து திட்டங்கள் மாறுபடும். அந்தவகையில் 3 நிறுவனங்களும் வழங்கும் தினமும் 2 ஜிபி ப்ரீபெயட் டேட்டா திட்டம் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வேலிடிட்டி மாற்றத்துடன் வைத்துள்ளது. வி.ஐ ரூ. 319 திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ. 539 மற்றும் ரூ. 839 திட்டமானது அதே பலன்களுடன் வழங்குகிறது. ஆனால் முறையே 56 நாட்கள் மற்றும் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. அடுத்ததாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரூ.1066 திட்டத்தில் இதே பலன்களுடன் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா பலன்களுடன் பல்வேறு ப்ரீபெயட் திட்டங்களை வழங்குகிறது. அவை விலை, வேலிடிட்டியில் வேறுபடுகின்றன. 2 ஜிபி டேட்டா ரூ. 249 திட்டம் 23 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.299, ரூ.533 மற்றும் ரூ.719 திட்டங்கள் 23 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனமும் தினமும் 2ஜிபி டேட்டாவுடன் வரும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. அன்லிமிடெட் காலிங் உடன் வரும் ரூ.319 திட்டமானது பட்ஜெட்க்கு ஏற்ற வகையில் இருக்கும் 1 மாத கால திட்டம். நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலியை அணுக விரும்பினால், அதே திட்டத்தின் விலை ரூ. 359. 56 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.549 அல்லது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.839 திட்டங்களும் இதில் உள்ளன.

தினமும் 2 ஜிபி டேட்டா திட்டத்தில் ஜியோ vs ஏர்டெல் vs வி.ஐ எது பெஸ்ட்?

ஒரு மாதம் நீடிக்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு, மீண்டும் ஜியோவிடமிருந்து ரூ.533 மற்றும் ரூ.719 திட்டம் 56 நாட்கள் மற்றும் 84 நாட்களுக்கு பெறலாம்.

நீங்கள் ஓ.டி.டி இயங்குதளங்களை அணுக விரும்பினால், வோடபோன் வழங்கும் ரூ.1066 திட்டமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி திட்டம் அல்லது ஏர்டெல் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டுச் சந்தாவுடன் வரும் ரூ.359 திட்டத்தைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan Vodafone Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment