ரிலையன்ஸ் ஜியோ பட்ஜெட் 4ஜி ஃபீச்சர் போனான ‘ஜியோ பாரத் பி1’-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ வி2 சீரிஸ் மற்றும் கே1 கார்பன் போன்ற பட்ஜெட் போன்களை விட தற்போதைய போர்ட்ஃபோலியோவில் இந்த போன் இணைய வசதிகளைப் பெற்றுள்ளது.
விலையில் உள்ள மற்ற ஃபோன்களைப் போலவே, ஃபீச்சர் ஃபோன் 2.4-இன்ச் திரையைக் கொண்டுள்ளது மற்றும் UPI
வசதிகளைப் பயன்படுத்த முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜியோ பே ஆப் இருக்கிறது. பின்புறத்தில், Google Pixel 8 போன்ற கேமரா அமைப்பு மற்றும் LED டார்ச் அமைக்கப்பட்டுள்ளது.
2,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட இந்த போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 343 மணிநேரம் வரை நீடிக்கும் என்று ஜியோ கூறுகிறது. ஜியோ பாரத் பி1 போனில் JioSaavn, எப்.எம்.ரேடியோ ஆப், ஜியோ சினிமா போன்ற ஆப்களில் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. பயனர்கள் பயன்படுத்த வசதியாக 23 மொழிகள் போனில் நிறுவப்பட்டுள்ளன.
போன் 110 கிராம் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது.
128 ஜிபி மெமரி கார்ட் வரை பயன்படுத்த அனுமதிக்கிறது. இது பட்ஜெட் ஃபீச்சர் ஃபோன் என்பதால், ஜியோ சிம் தவிர வேறு சிம் கார்டுகள் பயன்படுத்த முடியாது.
ஜியோ பாரத் தற்போது ஒரே நிறத்தில் மட்டும் வருகிறது. ப்ளாக் நிறத்தில் மட்டும் வருகிறது. அமேசான் தளத்தில் ரூ. 1,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளராக இல்லாவிட்டால், நிறுவனம் போன் உடனேயே இலவச சிம் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“