ஜியோ புக் 4ஜி லேப்டாப் ஜூலை 31-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் லேப்டாப் துறையில் களமிறங்க தயாராக உள்ளது. சிம் கார்டு ஸ்லாட்டுடன் 4G LTE நெட்வொர்க்கிங் திறனுக்கான ஆதரவுடன் குறைந்த விலையில் கடந்தாண்டு ஆக்டோபர் மாதம் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜியோ புக் ஆனது ஜியோ ஓ.எஸ்- ஆல் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டின் போர்க் செய்யப்பட்ட வெர்ஷனாகும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மற்றும் கேம்களை இயக்க முடியும். மாணவர்களை நோக்கமாக கொண்டு இந்த லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டது. JioBook 4G, Wi-Fi நெட்வொர்க் ஆதரவுடன் அதிவேக இணைப்பை வழங்குகிறது.
லேப்டாப் 11.6-இன்ச் HD டிஸ்ப்ளே (720p) உடன் வருகிறது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டா கோர் பிராசஸரை அடிப்படையாகக் கொண்டது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஈ.எம்.எம்.சி அடிப்படையிலான ஃபிளாஷ் ஸ்டோரேஜ் உடன் 128 ஜிபி வரை கூடுதல் ஸ்ரோரேஜ் விரிவாக்கத்திற்காக பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.
இந்த லேப்டாப் ஜியோ ஸ்டோரில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அமேசானில் விற்பனைக்கு வருகிறது. ரூ.16,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. அமேசானில் விற்பனைக்கு வரும்போது விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”