விளம்பரமே இல்லை; நெட்ஃபிலிக்ஸுக்கு போட்டியாக புதிய திட்டத்தை களமிறக்கும் ஜியோ சினிமா

JioCinema: நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிற ஓ.டி.டி தளங்களுக்கு போட்டியாக ஜியோ சினிமா புதிய திட்டத்தை களமிறக்க உள்ளது.

JioCinema: நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிற ஓ.டி.டி தளங்களுக்கு போட்டியாக ஜியோ சினிமா புதிய திட்டத்தை களமிறக்க உள்ளது.

author-image
WebDesk
New Update
JioCinema.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிற ஓ.டி.டி தளங்களுக்கு போட்டியாக ஜியோ சினிமா விளம்பரமில்லா சந்தா திட்டத்தை நாளை (ஏப்ரல் 25) அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தெரிகிறது. இது குறித்து நேரடியாக தெரிவிக்காத நிறுவனம் புதிய திட்டம் அறிமுகம் தொடர்பான வீடியோவில் Hint கொடுத்துள்ளது. 

Advertisment

இந்நிலையில் ஜியோ சினிமா தற்போது ஒரே ஒரு  “பிரீமியம்” திட்டம் மட்டுமே வழங்கி வருகிறது. இது ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதந்தோறும் ரூ.99 விலைக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் வீடியோ பார்க்கும் போது  இடையூறு விளைவிக்கும் வகையில் விளம்பரங்கள் வருகிறது. 


 
தற்போதைய பிரீமியம் திட்டம், HBO மற்றும் Peacock போன்ற பெரிய நிறுவனங்களின் பிரீமியம் வீடியோக்களுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. டாப்- குவாலிட்டி வீடியோ திறன் மற்றும் 4 டிவைஸ்களில் வீடியோவை  ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.

Advertisment
Advertisements

தற்போது ஜியோ சினிமா புதிய பயனர்களை ஈர்க்க ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலவசமாக (விளம்பரங்கள் இருந்தாலும்) ஸ்ட்ரீமிங் செய்கிறது. கட்டணம் இல்லாமல் நல்ல தரத்துடன்  ஸ்ட்ரீமிங் செய்கிறது. இந்நிலையில் புதிய திட்டத்தில் விளம்பரம் இல்லாமல் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jio cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: