இந்தியாவில் ஜியோ சினிமா ஒரு பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக மாறி வருகிறது. HBO உடனான டை-அப்கள் உட்பட, உள்ளூர் மற்றும் சர்வதேச உள்ளடக்கம் கொண்ட அனைத்து விதமான பொழுதுபோக்கு வீடியோக்களையும் வழங்குகிறது.
ஜியோ சினிமா ஃப்ரீமியம் OTT
பணம் செலுத்தும் OTT இயங்குதளமான Netflix போலல்லாமல், ஜியோ சினிமா வித்தியாசமாக செயல்படுகிறது. இது ஒரு ஃப்ரீமியம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாகும், இதில் சில குறிப்பிட்ட வீடியோக்கள் பணம் ஏதும் செலுத்தாமல் இலவமாக பார்க்கலாம்.
ஜியோ சினிமா சந்தா கட்டணம்
ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தா திட்டம்ஆண்டுக்கு ரூ.999 ஆகும். பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் அல்ட்ரா HD இல் பார்க்க முடியும். பிரீமியம் உடன், பிரத்தியேக பிரீமியர்கள், செக்ஸ் அண்ட் தி சிட்டி மற்றும் சிலிக்கான் வேலி போன்ற கிளாசிக் நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.
ஜியோ சினிமா சைன்- அப் பிராசஸ்
ஜியோ சினிமாவை மொபைல் எண் மூலம் இலவமாக சைன்- அப் செய்து கொள்ளலாம். இது ஜியோவின் தயாரிப்பு என்றாலும், ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளைக் கொண்ட பயனர்களும் பயன்படுத்தலாம்.
குளோபல் கன்டெண்ட்
ஜியோ சினிமா HBO and Peacock போன்ற குளோபல் கன்டெண்ட் பார்ட்னருடன் இணைந்து இந்தியாவில் பிரத்யேகமாக வழங்குகிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ், செக்ஸ் அண்ட் தி சிட்டி, சிலிக்கான் வேலி மற்றும் பல திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
ப்ளாட்பாம்
ஆண்ட்ராய்டு, iOS, ஆண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் டிவி, வெப்ஓஎஸ் மற்றும் சாம்சங் டைசன் டிவி ஓஎஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய தளங்களிலும் ஜியோசினிமா கிடைக்கிறது. தவிர, கம்ப்யூட்டர், லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும்.
10க்கும் மேற்பட்ட மொழிகள்
ஜியோ சினிமா இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் மற்றும் 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
ஜியோ சினிமா இணைப்பு
Viacom18 இன் மற்றொரு பிரபலமான OTT தளமான Voot, JioCinema உடன் இணைகிறது. எனவே, அனைத்து Voot உள்ளடக்கமும் ஜியோ சினிமாவுக்கு மாற்றப்படும்,
இந்தியாவில் மட்டும்
ஜியோ சினிமா தற்போது இந்தியாவில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே உள்ள பயனர்கள் குறைந்தபட்சம் இப்போதைக்கு சேவையை அணுக முடியாது.
ஜியோ சினிமா டவுன்லோடு
சில குறிப்பட்ட வீடியோக்கள் இலவசமாக டவுன்லோடு செய்யலாம். பிரீமியம் பயனர்கள் Android மற்றும் iOS போன்களில் டவுன்லோடு செய்து வீடியோக்களை பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“