/indian-express-tamil/media/media_files/UmJGSQrD4FsPhuTcuEVk.jpg)
கடந்த மாதம், ஜியோசினிமா பிரீமியம் விளம்பரமில்லாத சந்தா திட்டத்தின் விலையை மாதம் ரூ.59ல் இருந்து ரூ.29 ஆக அதிரடியாக குறைத்தது. இப்போது, ஜியோசினிமா பிரீமியம் விளம்பரம் இல்லாத வருடாந்திர திட்டத்தை 12 மாதங்களுக்கு ரூ.299 வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது முந்தைய விலையான ரூ.999 உடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய தள்ளுபடியாகும்.
இருப்பினும் இது ஒரு டிவைஸ் மட்டுமே பயன்படுத்த முடியும். ஃபேமிலி திட்டம் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த புதிய சந்தாவில் பழைய சந்தாவில் உள்ள அதே பலன்களைப் பெற முடியும். விளம்பரம் இல்லா ஸ்ட்ரீமிங் அனுபவம், 4K தரத்தில் வீடியோ என அனைத்தையும் பெறலாம்.
அதோடு மாதாந்திர திட்டத்தைப் போலவே, வருடாந்திர சந்தா திட்டத்திலும் HBO, Peacock மற்றும் Paramount Plus போன்ற சேவைகளையும் பெற முடியும். லைவ் ஸ்ட்ரீமிங் தவிர மற்ற சேவைகளுக்கு விளம்பரம் இல்லாமல் வீடியோ ஒளிபரப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.