/indian-express-tamil/media/media_files/2024/11/15/Z3ssqDu7VxNQ97ClYdkW.jpg)
நீங்கள் சினிமா மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தால், இப்பதிவு நிச்சயம் உங்களுக்கானது தான். உங்கள் பர்ஸை பதம் பார்க்காத வகையில் ஜியோ சினிமாவின் ஓடிடி சந்தா தொகை அமைந்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் அல்லது ப்ரைம் வீடியோ போன்ற ஓடிடி தளங்கள் மாதம் ரூ. 100 சந்தா வசூலிக்கும் நிலையில், ஜியோ சினிமாவின் பிரீமியம் சந்தா மாதம் ரூ. 29-க்கு கிடைக்கிறது. இதன் மூலம் சர்வதேச படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வரை அனைத்தையும் 4K தரத்தில் காணலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: JioCinema Premium subscription at Rs 25 is a steal deal: Benefits, shows, and how to sign up
ஜியோ சினிமா செயலியை ஸ்மார்ட் போன்களில் தொடங்கி ஸ்மார்ட் டிவி வரை பயன்படுத்தலாம். இதன் பிரீமியம் சந்தா மூலம் விளையாட்டு மற்றும் ஹெச்.பி.ஓ, நிக் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் தொடர்களை தவிர்த்து மற்ற அனைத்தையும் விளம்பரங்களின்றி கண்டு மகிழலாம்.
ரூ. 29 சந்தா செலுத்துவதன் மூலம் ஒரு சாதனத்தில் பிரீமியம் சேவையை பெறலாம். ரூ. 89 செலுத்துவதன் மூலம் 4 சாதனங்களில் பிரீமியம் சேவையை பெற முடியும்.
நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ப்ரைம் வீடியோவில் மலிவு விலை சந்தா திட்டத்தில் 720p அல்லது 480p தரத்தில் மட்டுமே படங்களை காண முடியும். ஆனால், ஜியோ சினிமாவில் மலிவு விலை சந்தாவின் மூலமாகவே 4K தரத்தில் காணலாம்.
தற்போது ஜியோ சினிமா ஓடிடியில் புகழ்பெற்ற தொடர்களான கேம் ஆஃப் த்ரோன்ஸ், லா அண்ட் ஆர்டர் மற்றும் காட்ஸில்லா, ட்யூன், ஓப்பன்ஹெய்மர் போன்ற படங்களும் காணலாம்.
ஜியோ சினிமா செயலி அல்லது வலைதளத்தில் பிரீமியம் பேனர் தளத்திற்கு சென்று பணம் செலுத்தி இந்த சேவைகளை பெறலாம். மாதந்தோறும் ஆட்டோ பே முறையிலும் இதனை பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.