/indian-express-tamil/media/media_files/No6PAzzDcgAoVgrzmjuH.jpg)
ஜியோ சினிமா சிறப்பு சலுகையாக அதன் அதன் பிரீமியம் சந்தா திட்டத்தின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. விளம்பரம் இல்லா பிரீமியம் சந்தா திட்டம் மாதம் 29 ரூபாய்க்கு வழங்குகிறது. 4 டிவைஸ் வரை பயன்படுத்தக் கூடிய குடும்ப சந்தா திட்டம் மாதம் 89 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் முந்தைய விலை சிங்கில் டிவைஸ் ரூ. 59 மற்றும் குடும்ப சந்தா திட்டம் மாதம் ரூ. 149 ஆக இருந்தது. எனினும் இந்த சிறப்பு சலுகை எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்பது தெளிவாக இல்லை.
முன்னதாக, ஜியோசினிமா பிரீமியம் திட்டமானது ஒரு மாதத்திற்கு ரூ.99 ஆக இருந்தது, இருப்பினும் இதில் விளம்பரம் ஒளிபரப்பபட்டது. ஆனால் தற்போது புதிய பிரீமியம் திட்டங்களின் கீழ், ஜியோசினிமா குறைந்த விலையில் 4K தெளிவுத்திறனுடன் விளம்பரமில்லா ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது, லைவ் ஸ்போர்ட்ஸ் தவிர மற்றவற்றிக்கு விளம்பரம் இருக்காது.
Your new entertainment plan is here!
— JioCinema (@JioCinema) April 25, 2024
JioCinema Premium is here at Rs. 29 per month!
Exclusive content. Ad-free. Asli 4K. Any device.#JioCinemaPremium#JioCinemaKaNayaPlan#JioCinemapic.twitter.com/44lyqHUzvy
மேலும் இந்த திட்டத்தில் HBO, Peacock மற்றும் Paramount+ போன்ற பார்னர் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் அனைத்து கன்டென்ட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தை ஜியோசினிமா ஆப் அல்லது வெப் மூலம் சப்ஸ்கிரைப் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.