பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்தியாவில் முதலில் இந்தியில் அறிமுகமான இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் மக்களின் ஆதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் 6 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. விரைவில் 7-வது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது.
இந்தியில் நடிகர் சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்தியில் பிக்பாஸ் ஓ.டி.டி சீசன் 2 நிகழ்ச்சி நேற்று (ஜுன் 17) தொடங்கியது.
10-12 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கி அங்கு கொடுக்கப்படும் போட்டிகளை திறம்பட செய்தும், இறுதியில் மக்களின் ஓட்டுகளை பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.
இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஓ.டி.டி சீசன் 2 நிகழ்ச்சியை ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது. 24 7 லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதோடு பார்வையாளர்களும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போட்டி, நிகழ்ச்சி தருணங்களிலும் நீங்கள் கேள்விகள் மற்றும் போட்டியாளர்களிடையே உரையாடி விளையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சினிமா ஃபிபா உலக கோப்பை 2022, ஐ.பி.எல் 2023 போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது. ஏராளமானனோர் இலவசமாக கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் பிக்பாஸ் ஓ.டி.டி சீசன் 2 நிகழ்ச்சியும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஜியோ சினிமாவில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“