ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ஆச்சரியமூட்டும் விலையில். ஜியோ மார்ட்டில் ஜியோடைவ் வி.ஆர் ஹெட்செட் ரூ.1,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜியோ பயனர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கிறது. ஜியோடைவ் வி.ஆர் ஹெட்செட் மூலம் 100 இன்ச் விர்ச்சுவல் ஸ்கிரீனில் 360 டிகிரி அனுபவத்தில் ஜியோ சினிமாவில் டாடா ஐ.பி.எல் போட்டிகளை காணலாம்.
Advertisment
4.7 முதல் 6.7 இன்ச் வரையிலான திரை அளவு கொண்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களிலும் பயன்படுத்த முடியும். VR ஹெட்செட் ஸ்மார்ட்போனின் கைரோஸ்கோப் மற்றும் accelerometer பயன்படுத்தி இயக்கப்படுகிறது. போனில் ஜியோடைவ் பயன்படுத்த JioImmerse ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சென்டர் மற்றும் சைடு வீல்களுடன் adjustable lenses உடன் வருவதால் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், படங்கள் துல்லியமாகவும், கிளியராகவும் தெரிகிறது.
VR ஹெட்செட்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?
ஜியோடைவ் போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் மொபைலின் திரையின் முன் உள்ள இரண்டு லென்ஸ்கள் மூலம் வேலை செய்கின்றன. திரையில் காட்சி வரும் போது ஹெட்செட்டின் இடது மற்றும் வலது பக்கம் என இரு பக்கங்களிலும் வெவ்வேறு வகையில் படங்களை உங்கள் கண்ணுக்கு காண்பிக்கும். இதன் விளைவாக 3D காட்சி கிடைக்கும். மொபைல் போனின் கைரோஸ்கோப் மற்றும் accelerometer சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஜியோடைவ் எவ்வாறு பயன்படுத்துவது?
JioDive ஐப் பயன்படுத்தத் தொடங்க, ஹெட்செட் பெட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, JioImmerse ஆப் இன்ஸ்டால் செய்யவும். பின்னர் ஆப்-ஐ ஓபன் செய்து, JioDive ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, 'Watch on JioDive' கொடுக்கவும்.
இப்போது ஹெட்செட்டின் front கவரை திறந்து support clip மற்றும் lenses இடையே மொபைலை வைக்கவும். இப்போது JioDive-வை தலையில் அணிந்து, picture quality தேர்ந்தெடுக்கவும். அவ்வளவு தான் இப்போது ஐ.பி.எல் பார்த்து மகிழலாம்.
ஜியோ டைவ்-ல் ஐ.பி.எல் தவிர, கேம்கள் விளையாடலாம். JioImmerse பயன்பாட்டைப் பயன்படுத்த, நீங்கள் Jio 4G, 5G அல்லது JioFiber நெட்வொர்க்கில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“