ஜியோஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஆக்ட், ஹாத்வே – சிறந்த 100Mbps பிராட்பேண்ட் திட்டங்கள் எவை?

Jiofiber, ACT, Airtel xstream, Hathway best 100mbps broadband plans ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அன்லிமிடெட் டேட்டாவுடன் 200Mbps வேகத்தை வழங்குகிறது.

Jiofiber ACT Airtel xstream Hathway best 100mbps broadband plans compared Tamil News
Jiofiber ACT Airtel xstream Hathway best 100mbps broadband plans Tamil News

Jiofiber, ACT, Airtel Xstream, Hathway best 100mbps broadband plans Tamil News : ஜியோ ஃபைபர் 2020-ம் ஆண்டின் Q4-ல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிராட்பேண்ட் வேகத்தை வழங்கியதாக ஓக்லா சமீபத்தில் வெளிப்படுத்தியது. ACT இரண்டாவது இடத்தையும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் மூன்றாம் இடத்தையும், ஹாத்வே இந்தியாவின் நிலையான பிராட்பேண்ட் வேகத் தரவரிசையில் நான்காவது இடத்தையும் பெற்றது. எனவே, சிறந்ததைத் தேர்வு செய்வதை எளிதாக்குவதற்காக இந்த பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களிடமிருந்து சிறந்த 100Mbps திட்டங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

ஜியோஃபைபர் 100Mbps பிராட்பேண்ட் திட்டம் :

ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 மாத ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது 100 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. கூடுதல் ஜிஎஸ்டி கட்டணங்களும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். 100Mbps வேகத்தைத் தவிர, அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் அழைப்புகளுடன் இந்த திட்டம் வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் ஒரு மாத அடிப்படையில் 3,300 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறுவீர்கள். அதன் பிறகு, குறைக்கப்பட்ட இணைய வேகத்தில் ஆன்லைனை பயன்படுத்த முடியும்.

அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனி எல்ஐவி, ஜீ5 பிரீமியம், வூட் செலக்ட் போன்ற OTT பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை நீங்கள் விரும்பினால், 150Mbps வேகத்தை வழங்கும் ஜியோஃபைபர்-ன் ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தை வாங்க வேண்டும். ரூ.1,500 அன்லிமிடெட் டேட்டா பிராட்பேண்ட் திட்டத்துடன் நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பைப் பெறுவீர்கள். இந்தத் திட்டம் 300Mbps வேகத்துடன் அனுப்பப்படுகிறது. அனைத்து திட்டங்களிலும் தரவுடேட்டா மாற்றம் செய்ய வசதி இல்லை என்பதை நினைவில் கொள்க. ஜியோ அதன் சேவைக்காக 30 நாள் சோதனையையும் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ACT பிராட்பேண்ட் திட்டங்கள் :

மும்பை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் 100Mbps பிராட்பேண்ட் திட்டங்களை ACT வழங்கவில்லை. அகமதாபாத் மற்றும் நெல்லூர், ஆந்திரப் பிரதேசம் போன்ற நகரங்களில் மட்டுமே 100Mbps திட்டங்களை ACT கொண்டுள்ளது. இதன் விலை நெல்லூரில் ரூ.799-லிருந்து தொடங்குகிறது. மேலும், இந்த பிராட்பேண்ட் சேவை வழங்குநரிடமிருந்து 1000 ஜிபி தரவை மட்டுமே பெறுவீர்கள். இந்த நிறுவனம் ஜீ 5 மற்றும் சோனிலிவ் பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. அகமதாபாத்தில், ACT 500 ஜிபி தரவை மட்டுமே தருகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் 100 எம்.பி.பி.எஸ் பிராட்பேண்ட் திட்டம் :

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் 100Mbps பிராட்பேண்ட் திட்டம் உள்ளது. இதன் விலை ரூ.799. இந்தத் திட்டம் உங்களுக்கு 100Mbps இணைய வேகத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பெட்டியையும் உள்ளடக்கியது. இது டிவி சேனல்களுக்கு இலவச அணுகல் மற்றும் 10,000 திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உட்பட ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டிலிருந்து OTT உள்ளடக்கத்தை வழங்குகிறது. நிறுவனத்தின் தளத்தின்படி ஏர்டெல் தேங்க்ஸ் நன்மை, அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் இலவச ஷா அகாடமி சந்தாவையும் பெறலாம்.

எந்த OTT பயன்பாட்டிற்கும் இலவச அணுகலைப் பெற முடியாது. ஏர்டெல் ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்துடன் இலவச ஜீ 5 மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாக்களை வழங்குகிறது. இது அன்லிமிடெட் டேட்டாவுடன் 200Mbps வேகத்தை வழங்குகிறது.

ஹாத்வே 100Mbps பிராட்பேண்ட் திட்டம் :

ஹாத்வே தனது 100 எம்.பி.பி.எஸ் பிராட்பேண்டை ரூ.2,247 விலைக்கு வழங்குகிறது. இது 3 மாத திட்டத்திற்கான விலை. மேலும், இது அன்லிமிடெட் தரவு நன்மைகளுடன் அனுப்பப்படுகிறது. ஹாத்வேயிலிருந்து 6 மாத 100 எம்.பி.பி.எஸ் பிராட்பேண்ட் திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு ரூ.4,494 செலவாகும். ஆண்டு 100Mbps பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ.8,988. உங்களுக்கு இலவச OTT பயன்பாடுகள் அல்லது டேட்டா ரோல் ஓவர் வசதி கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jiofiber act airtel xstream hathway best 100mbps broadband plans compared tamil news

Next Story
நிசார் – இந்தியா, அமெரிக்கா இணைந்து உருவாக்கும் புதிய செயற்கைகோள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com