Jiofiber 150mbps unlimited data at Rs 999 Tamil News : ஜியோ ஃபைபரின் பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ.399-ல் தொடங்கி ரூ.8,499 வரை உள்ளன. ஜியோ தனது ரூ.999 திட்டத்திற்கு 30 நாள் இலவச சோதனை விருப்பத்தையும் வழங்குகிறது. இது பயனர்கள் ரூ.2,500 திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புத் திட்டங்கள் மற்றும் அவை என்ன நன்மைகளை வழங்குகின்றன என்பதை இனி பார்க்கலாம்.
சிறந்த ஜியோ ஃபைபர் 2021 பிராட்பேண்ட் திட்டங்கள், விலை, நன்மைகள்
ரூ.399 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம், 30 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் “உண்மையிலேயே அன்லிமிடெட் டேட்டா” உடன் வருகிறது. ஒரு மாத அடிப்படையில் 3,300 ஜிபிக்கு மேல் டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் நிறுவனம் குறிப்பிடுகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் இதுதான் விதிமுறை. அடிப்படை ஜியோ ஃபைபர் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளைக் கூட ஆதரிக்கிறது. இருப்பினும், இதில் OTT பயன்பாடுகளுக்கான ஆதரவு இல்லை.
ரூ.699 பிராட்பேண்ட் திட்டத்துடன், வாடிக்கையாளர்களுக்கு 100 எம்.பி.பி.எஸ் இணைய வேகம், அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் அழைப்புகள் கிடைக்கின்றன. OTT சந்தா சலுகைகளை இதனுடன் நிறுவனம் இணைக்காது.
அடுத்ததாக ரூ.999 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் உள்ளது. இது 150 எம்.பி.பி.எஸ் வேகத்தையும், மாதத்திற்கு ரூ.1,000 மதிப்புள்ள 14 வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலையும் வழங்குகிறது. நீங்கள் அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனி எல்ஐவி, ஜீ 5 பிரீமியம், வூட் செலக்ட், வூட் கிட்ஸ், சன் என்எக்ஸ்டி, ஏஎல்டி பாலாஜி, டிஸ்கவரி +, ஈரோஸ் நவ், ஜியோசினிமா, லயன்ஸ் கேட் ப்ளே, ஷெமரூமீ, ஹோய்சோய் மற்றும் பல பயன்பாடுகளைப் பெறுவீர்கள். இந்த பேக், அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளையும் ஆதரிக்கிறது.
இந்தத் திட்டத்தில் 4கே செட்-டாப் பாக்ஸும் அடங்கும். இருப்பினும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை ரூ.2,500. மேலும், இது 30 நாள் சோதனைக் கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே, பயனர்கள் 30 நாட்களுக்கு அம்சங்களை சோதித்து, சேவையை விரும்பவில்லை என்றால் அந்த காலம் முடிவதற்குள் ரத்து செய்யலாம்.
ஜியோவிலிருந்து வழக்கமான ரூ.999 பிராட்பேண்ட் பேக்கில், 4கே பாக்ஸ் அல்லது OTT பயன்பாடுகளுக்கான அணுகல் இல்லை. இருப்பினும் இது 150Mbps வேகத்தை வழங்குகிறது.
ரூ.1,499 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம், 300 எம்.பி.பி.எஸ் வேகம், அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் அழைப்பு சலுகைகள் மற்றும் மாதத்திற்கு ரூ.1,500 மதிப்புள்ள 15 ஓ.டி.டி பயன்பாட்டு சந்தாக்கள் உள்ளடக்கியது. இதன் மூலம், நீங்கள் நெட்ஃப்ளிக்ஸ் அடிப்படை திட்டத்தையும் மேலே குறிப்பிட்ட அனைத்து OTT பயன்பாடுகளையும் பெறுவீர்கள்.
ரூ.2,499 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் 500 எம்.பி.பி.எஸ் இணைய வேகம், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகள் உள்ளன. ஜியோவிலிருந்து வரும் இந்த பிராட்பேண்ட் திட்டம் 15 OTT பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. இது மாதத்திற்கு ரூ.1,500 மதிப்புடையது. இதன் மூலம், நீங்கள் நெட்ஃப்ளிக்ஸின் நிலையான திட்டத்தைப் பெறுகிறீர்கள்.
ரூ.3999 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம், 1 ஜி.பி.பி.எஸ் இணைய வேகத்துடன் வருகிறது. அத்துடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வைஸ் அழைப்பு நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும் இது, மாதத்திற்கு ரூ.1,650 மதிப்புடைய 15 ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ரூ.8,499 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம், நெட்ஃப்ளிக்ஸ் பிரீமியம் 4கே திட்டத்தையும், ரூ.1,800 மதிப்புள்ள மேலே குறிப்பிட்ட அனைத்து OTT பயன்பாடுகளையும் வழங்குகிறது. இந்த பேக் 1 ஜி.பி.பி.எஸ் வேகம் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளைக் கொடுக்கிறது.
ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை எவ்வாறு வாங்குவது?
முதலில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டுப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் முழு முகவரியை வீட்டில் இருந்தபடியே இணையம் வழி வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் பகுதியில் ஜியோ ஃபைபர் கிடைத்தால், உங்கள் வீட்டிலும் எளிதாக இணைப்பைப் பெற முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.