ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா சேவைகள் மட்டுமின்றி பிராட்பேண்ட் சேவைகளையும் வழங்கி வருகிறது. ஜியோ ஃபைபர் எனப் பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் திட்டங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டு வகைகளாக சேவைகள் வழங்குகிறது. அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி. ஓடிடி பலன்கள் எனப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
ரூ.399 தொடங்கி, ஒரு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை திட்டங்களை கொண்டுள்ளது. 1 மாதம், 3 மாதம், 1 வருடம் எனப் பயனர் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ஜியோ ஃபைபர் 3 மாத திட்டம் குறித்து இங்கு காண்போம்.
ஜியோ ஃபைபர் ரூ.1197 திட்டம்
இந்த திட்டம் 90 நாள் வேலிடிட்டி மற்றும் அப்லோட் மற்றும் டவுன்லோட் ஆகிய இரண்டிற்கும் 30 எம்பிபிஎஸ் இணைய வேகம், அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வசதிகளை வழங்குகிறது. அன்லிமிடெட் டேட்டா எனிலும் மாதம் 3.3 TB வரை வழங்குகிறது. இது பலருக்கும் போதுமானதாக இருக்கும்.
அதாவது இந்த திட்டம் மாதம் ரூ.399 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர திட்ட ரீசார்ஜ்களைத் தேர்வுசெய்ய விரும்பாத பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாகும். ரூ.1197 உடன் பயனர்கள் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் .
இருப்பினும் இந்த திட்டம் ஓ.டி.டி பலன்கள் ஏதும் வழங்கவில்லை என்பது சற்று பின்னடைவாக உள்ளது.
ரூ. 2997 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ. 2997 ப்ரீபெய்ட் திட்டம் திட்டம் 150 Mbps வேகம் அன்லிமிடெட் காலிங், டேட்டா வசதிகளை வழங்குகிறது. அதோடு பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஜியோ சினிமா உள்பட 16 வகையான ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் தளங்களின் நன்மைகள் பயனர் பெறலாம். இந்த திட்டமும் 90 நாட்கள் செல்லுபடியாகும். இதே போல் ரூ. 4497, ரூ.7497, ரூ. 1,19,97 எனப் பல்வேறு திட்டங்களை ஜியோ ஃபைபர் வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“