ஜியோஹாட்ஸ்டார்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்த ஜியோ சினிமா - புதிய ஓடிடி தளத்திற்கான பிளான் விவரங்கள் இதோ!

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் இரண்டும் அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்து விட்டன. இதன் மூலம் இந்திய அளவில் பெரிய ஓடிடி தளமாக இது கவனம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
JioHotstar

Viacom18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகியவை இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே இருந்து வரும் ஜியோசினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரு ஓடிடி தளங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: JioHotstar: New streaming platform merging Jio Cinema and Disney+ Hotstar, a look at plans

 

Advertisment
Advertisements

வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தரத்திலான பொழுதுபோக்கை வழங்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜியோஹாட்ஸ்டாரின் தலைமை செயல் அதிகாரி கிரன் மணி தெரிவித்துள்ளார். 10 மொழிகளில் 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும் அதிகமாக இதன் சேவை வழங்கப்படுகிறது. இந்த ஒரே ஓடிடி தளம் மூலமாக சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்தமாக சிரீஸ்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போட்டியின் நேரலைகளைக் காணலாம்.

குறிப்பாக, ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பயனாளர்கள் எளிதாக ஜியோஹாட்ஸ்டாரின் தளத்திற்கு மாற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், என்.பி.சி யுனிவர்சல், வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி, ஹெச்.பி.ஓ மற்றும் பாரமவுண்ட் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.

இந்த ஓடிடி தளம் மூலமாக ஐ.பி.எல், WPL, ஐ.சி.சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் காண முடியும். இவை மட்டுமின்றி பிரீமியர் லீக், விம்பிள்டன், ஐ.எஸ்.எல் மற்றும் ப்ரோ கபாடி ஆகிய விளையாட்டுகளையும் கண்டு மகிழலாம். டிஜிட்டல் படைப்பாளிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஸ்பார்க்ஸ் என்ற புதிய வசதியை ஜியோஹாட்ஸ்டார் அறிமுகம் செய்துள்ளது. 

4K திரையிடலை தவிர செயற்கை நுண்ணறிவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஜியோஹாட்ஸ்டாரின் பட்ஜெட் பிளான் மூன்று மாதத்திற்கு ரூ. 149-ல் இருந்து தொடங்குகிறது. அதன்படி, ஒரே ஒரு மொபைல் போனில் இந்த சேவையை பெற மூன்று மாதங்களுக்கு ரூ. 149-ம், ஒரு ஆண்டுக்கு ரூ. 499-ம் செலுத்த வேண்டும். இதேபோல், டிவி அல்லது கணினி ஆகியவற்றில் பயன்படுத்தும் விதமாக இரண்டு டிவைஸ்களுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ. 299 மற்றும் ஒரு ஆண்டுக்கு ரு. 899 சந்தா செலுத்த வேண்டும். பிரீமியம் பிளான் அடிப்படையில் நான்கு டிவைஸ்களுக்கு விளம்பரங்கள் இன்றி நிகழ்ச்சிகளைக் காண மூன்று மாதங்களுக்கு ரூ. 499 மற்றும் ஒரு ஆண்டுக்கு ரூ. 1,499 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Hotstar Jio cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: