Jiomart Tamil News: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்குவதாக ,ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தவுடன் , ரிலையன்ஸ் தனது மின்னணு வர்த்தகத் தளமான ஜியோ மார்டை அறிவித்தது. சோதனை வடிவில் இருந்து வந்த ரிலையன்ஸ் ஜியோ மார்ட் இறுதியாக ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் தற்போது வெளியிடப்பட்டது.
முன்னதாக நவி மும்பை, தானே ஆகிய நகரங்களில் மட்டும் செயல்பட்டு வந்த ஜியோமார்ட் மின்னணு வர்த்தக சேவை, தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வர்த்தகத்திற்கான பிளிப் கார்ட், ஸ்னாப் டீல், அமேசான் போன்றவற்றுக்கு பதிலாக ரிலையன்சின் ஜியோமார்ட் செயலி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பொது மக்களை கவரும் வகையில், ஃப்ரீ டெலிவரி, டிஸ்கவுண்ட் (அதிகபட்ச விலையில் 5% விலை குறைப்பு) போன்ற சிறப்பு சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
Jiomart online shopping: ஜியோமார்ட் என்றால் என்ன?
2020 ஆம் ஆண்டு ஆர்ஐஎல் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் டி. அம்பானி, “ரிலையன்ஸ் ஜியோமார்ட், பேஸ்புக்கின் வாட்ஸ்அப் ஒன்றிணைந்து இந்திய நாட்டிலுள்ள லட்சக் கணக்கான சிறு வணிகங்களுக்கு, தங்கு தடையற்ற ஆன்லைன் வர்த்தக இணைப்பை உருவாக்கும் என்று அறிவித்தார்.
தற்போது, ஜியோமார்ட் சேவையின் மூலம் மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், மருந்து மற்றும் சுகாதாரப் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஜியோமார்ட் விரைவில் விரிவடையும் என்பதை அம்பானி உறுதிப்படுத்தியுள்ளார்.
வாட்ஸ்அப் பே சேவைக்கு ( டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை), இந்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. வாட்ஸ்அப் பே பயன்பாட்டிற்கு வந்தவுடன் ஜியோ மார்ட்டில் பணம் செலுத்தும் முறை இன்னும் எளிமையாகும் என்று கருதப்படுகிறது.
இஷா அம்பானி கூறுகையில், “கிரானா ஸ்டோர்களை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தவும், அதிகாரம் அளிக்கவும், ஈடுபடவும் ஜியோமார்ட் கட்டப்பட்டுள்ளது. அவர்களின் வணிகத்தையும் வருவாயையும் வளர்க்க ஜியொமார்ட் உதவும். மல்டிஃபங்க்ஸ்னல் பிஓஎஸ் மூலம் கிரானா ஸ்டோர் தங்கள் வாடிக்கையாளர்களுடன் ஜியோமார்ட் இயங்குதளத்தில் இணைந்திருப்பார்கள், பரிவர்த்தனை செய்வார்கள் ” என்று தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil