scorecardresearch

‘மிக மலிவான ஸ்மார்ட்போன்’… ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, சிறப்பு அம்சங்கள் இதோ!

ஜியோ மார்ட் டிஜிட்டல் கடைக்கு நேரில் சென்றோ அல்லது ஜியோ.காம் வாயிலாகவோ அல்லது வாட்ஸ் அப் மெசேஜை அனுப்பவதன் மூலமோ ரெஜிஸ்டர் செய்து வாங்கிவிட முடியும்.

‘மிக மலிவான ஸ்மார்ட்போன்’… ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, சிறப்பு அம்சங்கள் இதோ!

ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஜியோ போன் நெக்ஸ்ட்’ தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,999 முன்பணம் செலுத்தி, பெற்றுக்கொள்ளாம். மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளாலம்.

உலகின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக வெளிவர இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் போன், கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கியுள்ள பிரகதி ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் ஏன்னவென்றால் 10 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. திரையில் உள்ள எழுத்துகள் வெறு மொழியில் இருந்தாலும், அதனை மொழிபெயர்ப்பு செய்து நம் தாய் மொழியில் அதனை உரத்த வாசிக்கும் அம்சம் உள்ளது.

அதே போல, இணையப் பக்கம், செயலி, குறுஞ்செய்திகள், போட்டோக்களில் உள்ள எழுத்துக்கள் கூட பயனர்களின் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசித்துக் காட்டக் கூடிய வசதிகள் உள்ளன. கேமராக்களில் ஸ்னாப்சேட் போலவே பில்டர்கள் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்குவது எப்படி?

இந்த போனை வாங்கிட அருகாமையில் உள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் கடைக்கு நேரில் சென்றோ அல்லது ஜியோ.காம் என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு வாட்ஸ் அப் மெசேஜை அனுப்பவதன் மூலமோ ரெஜிஸ்டர் செய்து வாங்கிவிட முடியும்.
அதற்கு, Hi என 7018270182 எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும். போன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டது என பயனர்களுக்கு உறுதி மெசேஜ் வந்தவுடன், அருகிலிருந்து ஜியோ ஸ்டாருக்கு சென்று மொபைலை பெற்றுகொள்ளலாம்.

ஜியோபோன் நெக்ஸ்ட் திட்டங்கள்

ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை 1,999 ரூபாய் டவுன்பேமெண்ட் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை மாத தவணையாக 18 அல்லது 24 மாதங்கள் செலுத்தும் வகையில் வாங்கிகொள்ளலாம். 501 ரூபாய் புராசசிங் கட்டணமும் வசூலிக்க படுகிறது.

ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனானது, ஒரு ஜியோ சிம் உடன் கிடைக்கும். அந்த சிம்மில் 18 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் பிளான் வாலிடிட்டியை பெறமுடியும். அதில், 5ஜிபி டேட்டாவும், 100 நிமிடங்கள் இலவசமாக தொலைபேசி அழைப்பு பேசும் வசதியும் இடம்பெற்றிருக்கும். 24 மாதத்திற்கான திட்டத்திற்கு மாதம் 300 ரூபாயும், 18 மாதத்திற்கான திட்டத்திற்கு மாதம் 350 ரூபாயும் செலுத்த வேண்டும். அதன்படி, 18 மாதம் பிளேன் தேர்வு செய்கையில், ஆண்டிற்கு மொத்தமாக ரூபாய் 6300 ரூபாய் செலுத்தவேண்டும். எனவே, ஜியோபோன் நெகஸ்ட் ஸ்மார்ட்போனின் மொத்த விலை 8,299 ஆகும். அதில், பிளேன் திட்ட பணமும், செல்போன் இஎம்ஐ தொகையும் இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்னொரு திட்டம் இருக்கிறது. ’ஜியோ போன் நெக்ஸ்ட்’ Large பிளான். இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 18 மாதங்களுக்கு ரூ.500 அல்லது 24 மாதங்களுக்கு ரூ.450 செலுத்தலாம். பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகளை பெற முடியும்.

இதில், மூன்றாவது திட்டம் XL என அழைக்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் 18 மாதங்களுக்கு ரூ.550 அல்லது 24 மாதங்களுக்கு ரூ.500 செலுத்த முடியும். இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் தினமும் 2ஜிபி அதிவேக 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் வசதிகளை பெறுகிறார்கள்.

நான்காவது திட்டம் XXL என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைபவர்கள், 18 மாதங்களுக்கு மாதம் ரூ.600 அல்லது 24 மாதங்களுக்கு ரூ.550 செலுத்தி அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் தினமும் 2.5ஜிபி 4ஜி டேட்டாவைப் பெற முடியும்.

சிறப்பு அம்சங்கள்:

  • 5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
  • கார்னிங் கோரிலா கிளேஸ் 3
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் (QM-215, Quad Core upto 1.3 Ghz)
  • 2 ஜிபி ரேம், எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி இன்பில்ட்
  • 13 எம்.பி பின்புற கேமரா
  • 8 எம்.பி செல்பி கேமரா
  • 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி
  • டூயல் சிம்(நானோ)

வைஃபை, புளூடூத் (வி4.1), மைக்ரோ யூஎஸ்பி, 35. எம்.எம் ஆடியோ ஜாக் போன்றவற்றுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jiophone next price and specifications officially announced