ஜியோ யூசர்ஸ் கவனத்திற்கு... ரூ.350-க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்கள் இதோ!

குறைந்த வேலிடிட்டியில் அதிக டேட்டாவும், அதிக ஓ.டி.டி ஆஃப்ஸ் வேண்டுமானால், ரூ.198 பிளான் சிறந்தது. ஒரு மாதம் முழுவதும் 2GB டேட்டாவுடன், அன்லிமிடெட் எண்டர்டெயின்மெண்ட், ஷாப்பிங் ஆஃபர்கள் வேண்டுமானால், ரூ.349 திட்டம் சிறந்த தேர்வாக அமையும்.

குறைந்த வேலிடிட்டியில் அதிக டேட்டாவும், அதிக ஓ.டி.டி ஆஃப்ஸ் வேண்டுமானால், ரூ.198 பிளான் சிறந்தது. ஒரு மாதம் முழுவதும் 2GB டேட்டாவுடன், அன்லிமிடெட் எண்டர்டெயின்மெண்ட், ஷாப்பிங் ஆஃபர்கள் வேண்டுமானால், ரூ.349 திட்டம் சிறந்த தேர்வாக அமையும்.

author-image
WebDesk
New Update
Jio’s 5 most affordable plans

ஜியோ யூசர்ஸ் கவனத்திற்கு... ரூ.350-க்குள் 5 பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்கள்!

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சிறப்பான டேட்டா மற்றும் நீண்ட கால வேலிடிட்டியுடன் கூடிய மிகச் சிறந்த 'பணத்திற்கான மதிப்பு' கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களை வழங்கி வருகிறது. தற்போது, ஜியோவில் கிடைக்கும் ரூ.350-க்கு உட்பட்ட, அதிக டேட்டா மற்றும் கவர்ச்சிகரமான ஆஃபர்களைக் கொண்ட மலிவான பிளான்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisment
பிளான் தினசரி டேட்டா    வேலிடிட்டிவாய்ஸ் & எஸ்.எம்.எஸ்.ஓ.டி.டி சப்ஸ்கிரிப்ஷன்கள்
ரூ.1982 GB14 நாட்கள்அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ்.9+ OTT ஆஃப்கள்
ரூ.2391.5 GB22 நாட்கள்அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ்.Jio TV, JioAICloud.
ரூ.2991.5 GB28 நாட்கள்அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ்.Jio TV, JioAICloud.
ரூ.3291.5 GB28 நாட்கள்அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ்.JioSaavan Pro, Jio TV, JioAICloud.
ரூ.3492 GB28 நாட்கள்அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ்.JioHotstar & Zomato Gold (3 மாதங்கள்), JioSaavan Pro

ரூ.198 பிளான்: ஜியோவின் மலிவு விலை திட்டங்களில் இது அதிக டேட்டா (2GB/நாள்) மற்றும் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதன் மிகப்பெரிய சிறப்பு, சோனி லிவ், ஜீ5 உட்பட 9-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குவதுதான். கூடுதலாக, ஜியோ டிவி மற்றும் ஜியோஏ.ஐ. க்ளவுட் சந்தாக்களும் உள்ளன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ரூ.349 பிளான்: இத்திட்டத்தில் தினசரி 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஜியோவின் 9வது ஆண்டை முன்னிட்டு, இந்த திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜொமேட்டோ கோல்ட் சந்தா 3 மாதங்களுக்கு இலவசம். JioSaavan Pro சந்தா மற்றும் பல சலுகைகள் இத்திட்டத்தில் கிடைக்கின்றன. Jio Finance மூலம் Jio Gold-ல் 2% கூடுதல் சலுகை, JioHome சேவையில் 2 மாதங்கள் ப்ரீ டிரையல் (Free Trials), ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஏஜியோ-விலிருந்து சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும்.

Advertisment
Advertisements

ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களின் டேட்டா மற்றும் வேலிடிட்டி தேவைகளுக்கு ஏற்ப, மேலே உள்ள மலிவான மற்றும் நிறைந்த சலுகைகள் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பலன்களைப் பெறலாம்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: