ஜியோ, ஏர்டெல் நுழைவு கட்டணம் 50 சதவீதம் அதிகரிப்பு.. புதிய திட்டங்கள் அறிமுகம்?

பார்தி ஏர்டெல் முன்னதாக ப்ரீபெய்டு பயனர்களுக்கான நுழைவு-நிலை கட்டண திட்டத்தை 57 சதவீதம் அதிகரித்தது.

Jios postpaid entry tariff up 50 Percentage
ஜியோ நுழைவு கட்டணங்கள் 50 சதவீதம் வரை உயருகின்றன.

ப்ரீபெய்ட் பயனர்களை போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் பார்தி ஏர்டெல் சில புதிய திட்டங்களையும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ப்ரீபெய்டு வாடிக்கையாளர் போஸ்ட்பெய்டுக்கு மாறும்போது,ஒரு யூனிட்டுக்கான சராசரி வருவாய் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மொத்த பயனர் தளத்தில் 1-1.5% போஸ்ட்பெய்டு பயனர்களின் மிகக் குறைந்த பங்கைக் கொண்ட ஜியோ, தலா ரூ.99க்கு மூன்று கூடுதல் சிம் கார்டுகளுடன் `399′ குடும்பத் திட்டத்தை அறிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் இந்தத் திட்டத்திற்குச் சேர்ந்தால், மொத்த மாதாந்திர செலவு ரூ.696 ஆக இருக்கும். ஒரு தனிநபரின் கட்டணம் 174 ஆக வருகிறது.

தற்போது, அதன் மிகவும் பிரபலமான தனிநபர், ப்ரீபெய்ட் திட்டம் `666 ஆகும், இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
பார்தி ஏர்டெல் முன்னதாக ப்ரீபெய்டு பயனர்களுக்கான நுழைவு-நிலை திட்டத்தை 57% அதிகரித்து 22 வட்டங்களில் 155 ஆக உயர்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jios postpaid entry tariff up 50 percentage

Exit mobile version