ஒரு நாளைக்கு வெறும் ரூ.5 மட்டுமே... இனி ரீசார்ஜ் பற்றி கவலை இல்ல; ஜியோவின் புதிய பிளான்!

டிராய் (TRAI) விதிகளுக்கு இணங்க, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டேட்டா வசதி இல்லாத, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் சேவைகளை மட்டும் வழங்கும் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளன.

டிராய் (TRAI) விதிகளுக்கு இணங்க, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டேட்டா வசதி இல்லாத, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் சேவைகளை மட்டும் வழங்கும் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளன.

author-image
WebDesk
New Update
Reliance Jio.jpg

ஒரு நாளைக்கு வெறும் ரூ.5 மட்டுமே.. இனி ரீசார்ஜ் பற்றி கவலை இல்ல; ஜியோவின் புதிய பிளான்!

நாள்தோறும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரும்பாலனவர்களுக்கு மோபைல் கட்டணமாக பல மடங்கு செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. குறிப்பாக டேட்டாக்கள் பயன்படுத்தாவிட்டாலும் அதற்கும் கட்டணம் கட்டும் நிலை உள்ளது. இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சில நாட்களுக்கு முன்பு அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் சிறப்பு உத்தரவுகளை வழங்கியது.

Advertisment

டேட்டா தேவைப்படாதவர்களுக்கு என்றே பிரத்யேகமாக ரிலையன்ஸ் ஜியோ 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிராய் (TRAI)-இன் புதிய விதிகளுக்கு ஏற்ப, இத்திட்டங்களில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் மட்டுமே கிடைக்கின்றன. மேலும், நீண்ட கால வேலிடிட்டி இருப்பதால், பயனர்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

ரூ.1,748 பிளான் - 336 நாட்கள் வேலிடிட்டி

இந்தத் திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும். இது முந்தைய திட்டத்தைவிட 29 நாட்கள் குறைவு. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 3600 எஸ்.எம்.எஸ் நன்மைகளை பெறலாம். ஒரு நாளைக்கு வெறும் ரூ.5.20 செலவில், ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் அல்லாதது) மற்றும் ஜியோகிளவுட் போன்ற கூடுதல் சேவைகளையும் இத்திட்டத்தில் பயன்படுத்தலாம்.

ரூ.448 பிளான் - கால்ஸ், எஸ்.எம்.எஸ்-க்கு பெஸ்ட்!

ஜியோ தனது ரூ.458 திட்டத்தின் விலையை ரூ.448 ஆகக் குறைத்துள்ளது. இந்தத் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதில், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 1,000 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு வெறும் ரூ.5 செலவில் இந்தத் திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கலாம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை வழங்குவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என ஜியோ தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனமும் களத்தில்!

இதேபோன்ற மாற்றங்களை ஏர்டெல் நிறுவனமும் தனது திட்டங்களில் செய்துள்ளது.

Advertisment
Advertisements

ரூ.509 பிளான்: 84 நாட்கள் வேலிடிட்டி. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 900 எஸ்.எம்.எஸ் கிடைக்கும்.

ரூ.1,999 பிளான்: ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 3,000 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்த புதிய பிளான்கள் இணையப் பயன்பாடு இல்லாதவர்களுக்கு குறைந்த செலவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகின்றன.

Jio

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: