ஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன ?

நூறு குறுஞ்செய்திகள் அனுப்ப இயலும். ஆனால் இதன் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே

By: Published: April 7, 2019, 1:41:38 PM

Jio’s unlimited international roaming plans : ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவை வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு முக்கியம்சங்களையும் சலுகைகளையும் அளித்து வருகிறது. ஜியோ தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே அன்லிமிட்டட் சேவைகளைத்தான் வழங்கி வருகிறது. அந்த வகையில் சர்வதேச அழைப்புகளை சிக்கனமாக்க ரிலையன்ஸ் வழங்கி வரும் சிறப்பு சேவைகள் ஒரு பார்வை.

Jio’s unlimited international roaming plans

இண்டெர்நேசனல் ரோமிங் பேக்குக்களிலேயே இரண்டு வித்தியசமான பேக்குகளை வழங்குகிறது ஜியோ நிறுவனம். அன்லிமிட்டட் பேக், க்ளோபல் பேக் என இரண்டு பேக்குகளில் அன்லிமிட்டட் கேட்டக்ரியில் 3 சிறப்பு சேவைகளை வழங்குகிறது ரிலையன்ஸ். 20 நாடுகளுக்கு இந்த சேவை பொருந்தும்.

க்ளோபல் பேக்கில் ஒரே ஒரு பேக் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு சேவைகளையும் நீங்கள் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : ஏர்டெல் வழங்கும் மூன்று சூப்பர் இண்டெர்நேசனல் பேக்குகள்!

அன்லிமிட்டட் கேட்டகிரியில் வரும் Rs. 575ற்கான திட்டம்

250 எம்.பி டேட்டாவை நாள் ஒன்றிற்கு தருகிறது. அன்லிமிட்டட் இண்டெர்நெட் வசதியை 64kBPSல் பெற்றிடலாம். நாள் ஒன்றிற்கு 100 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம்
நூறு குறுஞ்செய்திகள் அனுப்ப இயலும். ஆனால் இதன் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே.

ரூ. 2,875 ற்கான பேக்

ஒரு வாரம் அல்லது நான்கு நாட்கள் என வெளிநாடு ட்ரிப் செல்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் பேக் இது. நாள் ஒன்றிற்கு 100 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். அதே போல் 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும். இன்கம்மிங் கால்கள் இலவசம். இதன் வேலிடிட்டி 7 நாட்களாகும். 250 எம்.பி.டேட்டாவை நீங்கள் 64Kbps என்ற வேகத்தில் நீங்கள் பெற்றிடலாம்.

Rs. 5,751ற்கான பேக்

ஒரு மாதம் வேலிட்டி கொண்ட இந்த பேக் மூலமாக நீங்கள் மாதம் முழுவதும் இலவச இன்கம் கால்களை பேசிக் கொள்ளலாம். 1500 நிமிடங்கள் அவுட்கோயிங்க் கால்கள் பேசவும், 1500 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பவும் வசதியாக இந்த ஆஃபர் உருவாக்கப்பட்டுள்ளடு. 5ஜிபி டேட்டாவை நீங்கள் பெற்றுக் கொள்ளவும் இந்த பேக் உதவுகிறது.

20 நாடுகளின் பட்டியல்

இந்த மூன்று ஆஃபர்களையும் செக் குடியரசு, ஜெர்மனி, க்ரீஸ், ஹங்கேரி, ஐயர்லாந்து, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்தி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரோமானியா, சிங்கப்பூர், ஸ்பெய்ன், இலங்கை, தாய்லாந்து, துருக்கி, அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

ரூ.1,101 க்ளோபல் பேக்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் 20 நாடுகளைத் தைவ்ர நீங்கள் எந்த நாடுகளுக்குச் சென்றாலும் இந்த பேக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தாலும், நீங்கள் இணையம், வாய்ஸ்காலிங், எஸ்.எம்.எஸ்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Jios unlimited international roaming plans

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X