பிரபலமான டெலிகாம் பிராண்டான ஜியோ, புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்வேறு ஓவர்-தி-டாப் (OTT) தளங்களுக்கான அணுகலை பயனர்கள் பெற முடியும். இந்தத் திட்டங்கள் பல்வேறு பயன்பாடுகளிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பெறுவதற்கு மக்களுக்கு மிகவும் எளிதாக்குகின்றன. அவை ரூ. 398 இல் தொடங்குகின்றன, மேலும் ஆன்லைனில் வெவ்வேறு இடங்களிலிருந்து மக்கள் எப்படி பொழுதுபோக்கை ரசிக்கிறார்கள் என்பதை மாற்றும்.
இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, வெவ்வேறு ஆப்ஸிலிருந்து நீங்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் பெறலாம.
ஜியோ டி.வி புதிய பிரீமியம் திட்டங்கள் ரூ.398-ல் இருந்து தொடங்குகின்றன. இது 28 நாட்கள் செல்லுபடியாகும், ரூ.1198 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் ரூ 4498 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
விலை குறைந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டாவுடன் 12 OTT ஆப்ஸிற்கான அணுகலைக் கொண்டுள்ளது. மற்ற திட்டங்களில் 2ஜிபி டேட்டாவுடன் 14 OTT ஆப்ஸிற்கான அணுகலைக் கொண்டுள்ளது. கூடுதலாக வருடாந்திர திட்டத்தில் வேறு சில நன்மைகளையும் பெறலாம்.
ஆனால் JioCinema Premium, Amazon Prime Video (Mobile Edition) மற்றும் Disney+ Hotstar போன்ற சில ஓ.டி.டி தளங்களைப் பயன்படுத்த நீங்கள் கூடுதலான சில வழிமுறைகளை செய்ய வேண்டும். JioCinema Premium இல் சேர MyJio-ல் சென்று கூப்பனைப் பயன்படுத்த வேண்டும். அமேசான் பிரைமுக்கு அதே போல் தான் மை ஜியோ ஆப் செல்ல வேண்டும். அதே நேரத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நீங்கள் லாக்கின் மட்டும் செய்தால் போதும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“