ரூ. 699 க்கு 4ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்!

’ஃபுட்பால் ஆஃபர்’ என்ற பெயரில் சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஃபுட்பால் ஆஃபரில், ஜிவி 4ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் ரூ. 699 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த விலையில், தரமிக்க 4ஜி ஸ்மார்ஃபோன்கள் விரைவில் விற்பனைக்கு வருவதாக ஜிவி நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. புதுமையான வசதியுடன், வித்தியாசமான வடிவத்தில் வெளிவரவிருப்பதாக தலவல் வெளியாகியது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ’ஃபுட்பால் ஆஃபர்’ என்ற பெயரில் சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு கைப்பேசி தயாரிப்பாளரான ஜிவி மொபைல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவுடன் முதன்முறையாக இணைந்துள்ளது. இதன்படி, ஜியோ நிறுவனம் 2,200 ரூ கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. மை ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த கேஸ்பேக் தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டியலில் ஜிவி 4ஜி எனர்ஜி ஃபோன்களும் அடங்கும்.

ஜிவி நிறுவனத்தின் 4ஜி ஃபோனில் பலவகையான சிறப்மசங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் பெண்களுக்கு உதவும் வகையில் சில குறிப்பிட்ட எண்ணை பதிவு செய்தால் ஆபத்து என அழைப்பு செல்லுமாம். அதே போல், இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும். ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர், அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ, அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர், அடுத்த எண்களை இதே போல அழைக்கும். இதுப்போன்ற பல புதிய அம்சங்களுடன் இந்த ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close