July 2 Total Solar Eclipse : செவ்வாய் கிழமை அன்று முழு சூரியகிரகணம் நடைபெற உள்ளது. இதன் மொத்த நேரம் 4 நிமிடங்கள் 33 நொடிகள் மட்டுமே. இந்த வருடத்தில் நிகழ இருக்கும் முதல் சூரிய கிரகணமும் இதுவே.
இந்த அரிய நிகழ்வினை பசுபிக் பெருங்கடல் அருகே அமைந்திருக்கும் நாடுகள் மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மட்டுமே காண இயலும். கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தை விட அதிக நேரம், வருகின்ற சூரியகிரகணம் நிகழ உள்ளது.
மேலும் படிக்க - Solar Eclipse 2019 : சூரிய கிரகணம் காண ரெடியா? ஆன்லைனில் பார்ப்பது எப்படி? - முழு செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
இந்த அரிய நிகழ்வின் காரணமாக சிலி, அர்ஜெண்டினா, மற்ரும் சில தெற்கு பசுபிக் நாடுகள் சில நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10:25 மணிக்கு நிகழ உள்ளது என Space.com என்ற இணையம் தகவல் அளித்துள்ளது.
சூரிய கிரகணம் எப்படி நிகழ்கிறது ?
பொதுவாக சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போதே கிரகணங்கள் நிகழ்கின்றன. சூரிய கிரகணம் என்பது, சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைப்பது ஆகும். சூரிய மண்டலத்தில் தோன்றும் பெரும்பாலன சூரிய கிரகணம் தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் நாடுகளின் பார்வைக்கு படும்படியாகவே நிகழ்கின்றன. இந்தியாவில் நள்ளிரவு நேரத்தில் சூரியகிரகணம் நிகழ்வதால் இந்த அரிய நிகழ்வினை நம்மால் காண இயலாது.
மேலும் படிக்க : Blue Moon, Black Moon, Blood Moon, மற்றும் Super Moon பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்கள்!