சூரியனுக்கும் வியாழனுக்கும் (ஜூபிடர்) இடையில் பூமி தென்படும் Jupiter opposition என்ற அரிய வானியல் நிகழ்வு இன்று (டிச.7) நடைபெற உள்ளது.
பைனாகுலர், தொலைநோக்கி ஆகிய உபகரணங்களின் மூலம் வியாழன் கோளின் துணைக் கோள்களையும் காண முடியும். நள்ளிரவு நேரம் இதனை காண்பதற்கு சிறந்த நேரம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு 13 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். பூமியானது சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் எதிரெதிர் நிலையில் அமைந்திருப்பதால், வியாழன் கிரகத்தை பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்திலும் முழு வெளிச்சத்திலும் பார்க்கலாம்.
நாசா அறிக்கையின்படி, இந்த Opposition நிகழ்வு வியாழன் இரவு முழுவதும் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
கிழக்கு-வடகிழக்கில் சூரிய அஸ்தமனத்தில் உதயமாகி, வானத்தின் குறுக்கே நகர்ந்து, பின்னர் மேற்கில் விடியற்காலையில் அமைவதைப் பாருங்கள். இது நள்ளிரவில் வானத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும், இதுவே இந்த நிகழ்வை பார்ப்பதற்கு சிறந்த நேரமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“