இது குறித்து நாசா விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானி ஹென்றி த்ரூப் அஸ்ட்ரோன்மோர் கூறுகையில்,
கிரகங்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஆண்டின் எந்த நாளிலும் இது போன்ற இணைப்பு நிழ்வுகள் நடைபெறும். இந்த கிரகங்கள் இணையும் தேதி, சூரியனைச் சுற்றியுள்ள பாதைகளில் வியாழன், சனி மற்றும் பூமியின் நிலைகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு தற்செயலானதுதான். ஆனாலும் மக்கள் சூரிய மண்டலத்தைப் பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வியாழன்-சனி கிரகங்கள் சந்திக்கும் நிகழ்வை எவ்வாறு பார்ப்பது?
கண்ணாடி மற்றும் இதர எந்த உபகரணங்களும் இல்லாமல் இந்த நிகழ்வை வெறும் கண்கலால் பார்க்க முடியும். சூரியன் மறையும் வரை காத்திருந்து, பின்னர், வானத்தின் தென்மேற்கு திசையை நோக்கிப் பார்க்க வேண்டும். இதில் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகத்திற்கு மேலே இடதுபுறம் தோன்றுவதால் சனி சற்று மங்கலாக தெரியும்.
இந்த நிகழ்வை சிறந்த முறையில் பார்க்க, பைனாகுலர் அல்லது, சிறிய டெலஸ்கோப் வழியாக பார்க்கலாம். இதன் வழியாக பார்ப்பதன் மூலம், கிரகங்களைப் பற்றி சிறந்த அனுபவத்தை பெற்றலாம். இந்த நிகழ்வினை நீங்கள் நேரடியாக பார்க்க முடியாமல்போனால், நாசாவின் வலைத்தளம் அல்லது அதன் பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரடி ஸ்ட்ரீமைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.