Nasa Latest Tamil News: கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களின் சோதனை செயற்கைக்கோள், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி ஏஜென்சியால் வருகிற ஜூன் மாதம் துணை சுற்றுப்பாதையில் (sub orbit) செலுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக நாசாவின் சவுண்டிங் ராக்கெட் 7-லும் செலுத்தப்படும் என அறிவிப்பு.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த அத்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த அருண் ஆகிய மூன்று மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே செயற்கைகோளுக்கான தங்களின் சோதனை மாதிரிகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். சென்னையை முதன்மை தளமாகக் கொண்ட ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவால் வழிநடத்தப்பட்ட செயற்கைக்கோள் மாதிரி , நாசாவுடன் Idoodledu Inc இணைந்து 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ் (Cubes in Space) நடத்திய உலகளாவிய போட்டியின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட பல செயற்கைக்கோள்களை விட இவர்களின் செயற்கைக்கோள் உயர்தரமாக இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான விரிவான ஆராய்ச்சியை இந்த மூன்று மாணவர்களும் மேற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'இந்தியா சாட் (India Sat)' எனும் இவர்களின் செயற்கைக்கோள்தான் உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான செயற்கைக்கோள் எனக் கருதப்படுகிறது. 3 செ.மீ அளவு மற்றும் 64 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் வலுவூட்டப்பட்ட graphene பாலிமரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
Karur students developed satellites to be launched by NASA
இது, சொந்த சூரிய மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனால் அதற்கான சக்தியை அதுவே உருவாக்கிக்கொள்ளும். மேலும், அதன் சொந்த ரேடியோ அதிர்வெண்ணைக் (radio frequency) கொண்டு, பூமிக்கும் விண்வெளிக்கும் இடையிலான தரவை அனுப்பிப் பெறுகிறது. செயற்கைக்கோளினுள் பொருத்தப்பட்டிருக்கும் photographic film, ராக்கெட்டுக்குள் இருக்கும் அண்ட கதிர்வீச்சை உறிஞ்சி அளவிடும்.
இந்த மாணவர் அணியை ஸ்பேஸ் கிட்ஸின் ரிஃபாத் ஷாரூக் வழிநடத்துகிறார். இந்த முழு ஆராய்ச்சிக்கும் ரூ.1.35 லட்சம் செலவானது. இதனை, கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை நிதியுதவியாக அளித்திருக்கிறது.
முன்னதாக, 2017-ம் ஆண்டில் ஷாரூக்கின் குழு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக 'கலாம்சாட் (Kalamsaat)' எனும் செயற்கைக்கோளை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"