பொது இ சேவை மையம் அல்லது சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது.
அதுவே பின்னர் ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், இது காலம் கடத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதற்காக https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது ஆன்லைனிலேயே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக பொது இ சேவை மையத்திற்கோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால், ஆன்லைனிலேயே எளிதாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு, tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு ரூ.60, உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460 கட்டணம் செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“