திருமணத்திற்கு பிறகு ஆதார் கார்டில் உங்கள் பெயரை மாற்றுவது எப்படி?

நீங்கள் மாற்ற விரும்பும் பெயர்களுக்கு ஆதாரமாய் விளங்கும் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களிடமே திருப்பி கொடுக்கப்படும்

திருமணம் ஆனவர்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் தங்களது பெயரை ஆதார் கார்டில் இருந்து பெயர் உள்ளிட்ட விவரங்களை மாற்றுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்,

ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் மூலம் ஆதார் கார்டில் பெயரை மாற்ற முடியும்,

ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வது எப்படி?

உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, முதலில் online self-service update portal-ஐ லாக் இன் செய்ய வேண்டும்.

உங்கள் பெயர் அல்லது துணைப் பெயர் அல்லது இரண்டையும் மாற்ற நீங்கள் Request கொடுக்கலாம்.

இப்போது நீங்கள் உங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் நீங்கள் விரும்பிய மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

ஆதார் மையங்கள் மூலம் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டுமெனில், 

உங்கள் வீட்டிற்கு அருகே ஆதார் மையத்துக்கு செல்லவும்

நீங்கள் மாற்ற விரும்பும் பெயர்களுக்கு ஆதாரமாய் விளங்கும் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களிடமே திருப்பி கொடுக்கப்படும்.

தேவைப்பட்டால், உங்கள் biometrics அப்டேட் செய்து கொள்ளலாம்.

இதற்கு ரூ.25 நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

ஆதார் அப்டேட் செய்வதற்கு முன்பு, நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவை, 

நீங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவில்லை என்றாலோ, அல்லது உங்கள் மொபைல் எண்ணை UIDAI-யில் ரெஜிஸ்டர் செய்யவில்லை என்றாலோ, ஆஃப்லைன் மூலமாகவே நீங்கள் அப்டேட் செய்ய முடியும்.

நீங்கள் ஆதார் அப்டேட் செய்யும் போது, உங்கள் URN எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே, அப்டேட்ஸ் சரியாக ஆகியிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

உங்களின் சரியான பெயரை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே ஆதாரில் இருந்த பெயரையே மீண்டும் கொடுக்கக் கூடாது.  இந்த முழு செயல்பாடும் நிறைவடைய 90 நாட்கள் ஆகும். வெரிஃபை செய்த பிறகு, UIDAI தளத்தில் இருந்து உங்கள் இ-ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close