New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Encumbrance-Certificate.jpg)
இதற்காக எந்தவித லஞ்சமும், புரோக்கர்கள் கட்டணமும் கிடையாது.
தமிழ்நாடு மாநில பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் வில்லங்க சான்று, இணைய வழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக எந்தவித லஞ்சமும், புரோக்கர்கள் கட்டணமும் கிடையாது. அதாவது, 1950 முதல் 1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்க சான்றுகளை இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதன் பிரதிகளை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
Advertisment
இந்த நிலையில் ஆன்லைனில் வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஆன்லைனில் வில்லங்க சான்று
- தமிழக அரசின் பதிவுத் துறையின் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- இதையடுத்து, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதில் இலவசமாக வில்லங்க சான்று செக் செய்துக்கொள்ளலாம்.
- இந்த வில்லங்க சான்றுக்க விண்ணப்பிக்க அப்ளே ஆன்லைன் என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- அதில், விண்ணப்ப படிவம் ஒன்று வரும். அந்த விண்ணகப்ப படிவத்தில் பெயர், போன் நம்பர், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்- பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி, மாதம், எத்தனை வருடங்களுக்கு வில்லங்க சான்றிதழ் தேவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவிட வேண்டும்.
- அடுத்து பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண், சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
- பின்னர் கேட்ப்சா பதிவிட்டு வில்லங்க சான்றை பி.டி.எஃப் வடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.