தனி மனிதருக்கு வங்கி கணக்கு மிகவும் அவசியமாகிறது. சொந்த பயன்பாடு முதல் அரசு திட்டங்கள் வரை அனைத்தும் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு (குறைந்தபட்ச சேமிப்பு இல்லாமல்) பலருக்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக அவசர காலங்களில் பயன்படும். அந்த வகையில் இந்தியாவில் முதல் முறையாக கோடக் மஹிந்திரா வங்கி
ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு நடைமுறையை அறிமுகம் செய்தது. அதிலும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஆன்லைனில் வங்கி கணக்கு தொடங்கலாம். கே.ஒய்.சி பயன்பாடும் வீடியோ மூலம் ஆன்லைனில் செய்யப்படுகிறது.
ஆன்லைன் மூலம் கோடக் மஹிந்திரா வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்குவது எப்படி?
1. கோடக் மஹிந்திரா வங்கியின் இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
2. உங்கள் பெயர், ஃபோன் நம்பர் மற்றும் பின் குறியீட்டை அளித்து ‘Open Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் மொபைல் ஃபோனுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
4. இப்போது புதிய பக்கம் வரும் அதில், உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை வழங்கவும்.
5. அடுத்து, உங்கள் ஆதார் விவரங்களை அணுக வங்கியை நீங்கள் அனுமதிக்க வேண்டும், ஏனெனில் ஆதார் OTP சரிபார்த்த பின்னரே ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் திறக்க RBI அனுமதிக்கிறது.
6. ஸ்கிரீனில் காட்டப்படும் விவரங்களைச் சரிபார்த்து, உங்கள் முகவரி உங்கள் ஆதார் அட்டையுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
7. அடுத்து உங்கள் பெற்றோர் பெயர், பிறந்த தேதி போன்ற பிற அத்தியாவசிய விவரங்களை கொடுக்கவும்.
8. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். கோடக் வங்கியின் வீடியோ KYC செயல்முறையை நிறைவு செய்யவும், சிறிது நேரத்திற்குப் பிறகு உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும்.