கோடக் மஹிந்திரா வங்கி பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் நெட் பேங்கிங் வசதியை ஈஸியாக பெறலாம். வங்கி சேவை தொடர்பான அப்டேட்கள், சேவைகள், கே.ஒய்.சி, லோன், கிரெடிட் கார்டு பெறுவது போன்ற வசதிகளை வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம். கோடக் மஹிந்திரா வங்கி வாட்ஸ்அப் சாட்போட் மூலம் இதை பெறலாம்.
வாட்ஸ்அப் மூலம் நெட் பேங்கிங் எப்படி ஆக்டிவேட் செய்வது?
- முதலில் உங்கள் போன் எடுத்து கோடக் மஹிந்திரா வங்கி சாட்போட் எண் ‘22 6600 6022’ எண்ணை உங்கள் contacts-ல் பதிவு செய்யவும்.
- அடுத்து வாட்ஸ்அப் சென்று பதிவு செய்த இந்த எண்ணை தேடவும்.
3. கோடக் மஹிந்திரா வங்கியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பக்கம் தான் என்பதை உறுதி செய்த பின், HELP என்று டைப் செய்து அனுப்பவும்.
4. இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வரவேற்பு மெசேஜ் கொடுத்து உங்களுக்கு தேவையான ஆப்ஷன்களை கொடுக்கும்.
5. இதில் உங்களுக்கு தேவையானவற்றை செலக்ட் செய்து பயன்படுத்தலாம்.
6. உங்கள் ஆப்ஷனுக்கு ஏற்ப சாட்போட் பதிலளிக்கும். அதை பயன்படுத்தலாம்.
7. இவற்றை பயன்படுத்திய பின் கடைசியாக STOP எனக் கொடுத்து உரையை முடிக்கவும்.