Advertisment

நவீன அறிவியலை கற்றுக் கொள்வது எப்படி? கோவை கருத்தரங்கில் விளக்கம்

நவீன தொழில் நுட்பத்தில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது; கோவை பயிற்சி பட்டறையில் பேராசிரியர் கருத்து

author-image
WebDesk
New Update
kovai college

நவீன தொழில் நுட்பத்தில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது; கோவை பயிற்சி பட்டறையில் பேராசிரியர் கருத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பேராசியர்கள் கலந்து கொண்ட நவீன அறிவியல் துறை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடைபெற்றது.

Advertisment

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக நவீன வளரந்து வரும் அறிவியல் துறை தொடர்பான  பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் யசோதா தேவி வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் மணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய மணி, நவீன தொழில் நுட்பத்தில் அறிவியல் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும், நவீன அறிவியலை பாடபுத்தகம் மட்டுமின்றி கற்றல் திறனோடு மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து பேசினார்.

மூன்று நாட்கள் பல்வேறு அமர்வுகளாக நடைபெற உள்ள இதில் பெங்களூர் பல்கலைகழக இயற்பியல் துறை பேராசிரியர் உஷா தேவி, சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த பயிற்சி பட்டறையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த் மாணவ, மாணவிகள், பேராசியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kovai Science Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment