லேப்டாப் புதிதாக வாங்கியபோது நன்றாக இருந்த பேட்டரி திறன், போகப்போக குறைவது போன்று உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் செய்யும் நடவடிக்கைகளால் தான் பேட்டரியில் திறன் வெகுவிரைவாக காலியாகிறது. இதற்கு என்ன தீர்வு என்று யோசிப்பவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை.
கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரியுங்கள்
அதிக பிரைட்னஸ் வேண்டாம்
லேப்டாப் டிஸ்பிளேயில் எப்போதும் அதிக பிரைட்னஸ் வைக்க வேண்டாம், அது அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக இருந்தாலும், நமக்குத்தேவையான அளவில் மட்டுமே பிரைட்னஸ் வைத்துக்கொள்ளவும். டிஸ்பிளேயில் பிரைட்னஸை குறைப்பதன் மூலம், கண்டெண்ட் தெரிவதில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். லேப்டாப்பின் கீபோர்டிலேயே, பிரைட்னஸை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ பட்டன்கள் இருக்கும். அவ்வாறு இல்லாதவர்கள், செட்டிங்கிற்குள் சென்று அதில் சிஸ்டம் - டிஸ்பிளே என்ற பகுதிக்கு சென்று பிரைட்னஸை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்திடலாம்.
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் வேகம் குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு மீம்கள் வந்தநிலையில், தற்போது பேட்டரி திறனை சிறிதளவு எடுத்துக்கொள்ளும் வகையிலான எட்ஜ் பிரவுசரை, மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் குரோம், மோஜில்லா பயர்பாக்ஸ், ஓபரா பிரவுசர்களை ஒப்பிடும்போது, எட்ஜ் பிரவுசர், குறைந்த அளவிலேயே பேட்டரி திறனை எடுத்துக்கொள்வது உறுதியாகியுள்ளது.
சார்ஜ் தீரும்வரை காத்திருக்காதீர்கள்
பலர் லேப்டாப்பை ஆன்செய்யும்போதே, பேட்டரி சார்ஜ் ஏறுவதையும் துவக்கிவிடுவீர்கள். எப்போதும் பேட்டரி சார்ஜருடன் தொடர்பில் இருந்தால், பேட்டரியில் ஆயுட்காலம் குறைந்துவிடும். அதேபோல், பேட்டரி முழுவதையும் சார்ஜ் இறங்கியபின்னர் அதை சார்ஜ் ஏற்றுவதும் தவறான நடவடிக்கை ஆகும். பேட்டரி சார்ஜ் 20 சதவீதம் வரும்போது சார்ஜ் ஏற்றினால் நல்லது.
கீபோர்ட் பேக்லைட்களை அணைத்துவிடுங்கள்
நீங்கள் கேமிங் லேப்டாப்களை பயன்படுத்துபவராக இருந்தால், ரெட் பேக்லைட் இருந்தால் அதனை உடனடியாக அணைத்துவிடுங்கள். கீபோர்டில் function பட்டனை அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தலாம் அல்லது, விண்டோஸ் மொபிலிட்டி சென்டருக்கு சென்று அதன் இயக்கத்தை நிறுத்தலாம்.
பேட்டரியின் ஆயுள் நீடிக்க
லேப்டாப்பில் அலுவலக பணிகளை மேற்கொள்கிறீர்கள் என்றால், ஹெவியான சாப்ட்வேர்களை பயன்படுத்தாதீர்கள். அப்படி தேவைப்படும் பட்சத்தில் இரண்டு பவர்மோடுகளை பயன்படுத்துவது சாலச்சிறந்தது. அப்போது தான் பேட்டரியின் ஆயுள் நீடிப்பதோடு மட்டுமல்லாது அதன் செயல்திறனும் அதிகரிக்கும். பேட்டரி ஐகானை சொடுக்கி, அதில் சேவிங் பேட்டரி அல்லது பெஸ்ட் பெர்பார்மன்ஸ்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணருங்கள்.
பேட்டரி சேவர்
ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் சாதனங்களைப்போல லேப்டாப்பிலும், பேட்டரி சேவர் மோடு உள்ளது. உங்கள் லேப்டாப்பில் பேட்டரி சார்ஜ் 20 சதவீதத்திற்கு கீழ் குறையும்பட்சத்தில் ஆட்டோமெடிக் ஆக சார்ஜ் ஏற துவங்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது செட்டிங்ஸ் - சிஸ்டம் - பேட்டரி பகுதிக்கு சென்று அந்த பகுதியை ஆக்டிவேட் செய்துவிட வேண்டும். இமெயில், காலண்டர் சின்க், புஷ் நோட்டிபிகேசன்ஸ், பின்னணியில் இயங்கும் செயலிகள் உள்ளிட்டவைகளை நாம் டிஸ்ஏபிள் செய்துவிட வேண்டும்.
தேவையற்றவற்றை அன்பிளக் செய்துவிடுங்கள்
வெப்காம், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளையும், லேப்டாப் சிலீப் மோடில் இருக்கும்போது மவுசையும் டிஸ்கனெக்ட் செய்துவிட வேண்டும். இதெல்லாம் அதிகளவில் பேட்டரி திறனை பயன்படுத்துபவைகள் ஆகும்.
புளூடூத், வைபை அணைத்து விடுங்கள்
புளூடூத், வைபை பயன்படுத்தாத போது அதன் இயக்கத்தை நிறுத்திவிடுங்கள். இன்டர்நெட்டை பயன்படுத்தாதபோது, வைபை உள்ளிட்டவைகளை அணைத்துவிடுவது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.