இன்றைய இணைய உலகில் பலரும் தங்கள் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் ஏதேனும் எழுத்துகளை, புகைப்படங்களை, வீடியோக்களை கட், காபி, பேஸ்ட் (Cut, Copy, Paste) செய்கிறார்கள். இந்த கட், காபி, பேஸ்ட் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி லேரி டெஸ்லர் 74 வயதில் காலமானார்.
லேரி டெஸ்லர், கம்யூட்டரில் பயன்படுத்தப்படும் கட், காபி, பேஸ்டைக் கண்டுபிடித்தவர். இவர் ஒரு முன்னாள் ஜெராக்ஸ் ஆய்வாளர். அது மட்டுமில்லாமல், ஆப்பிள், யாஹூ, அமேசான்.காம் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பனியாற்றியுள்ளார்.
கம்ப்யூட்டர் விஞ்ஞானியான லேரி டெஸ்லர், 1945-ம் ஆண்டு பிறந்தவர். 1960களில் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர், அவர் ஸ்டான்ஃபோர்டில் ஆராய்ச்சி உதவியாளராகவும் இருந்தார், அவரது லிங்க்ட்இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அவர் “செயற்கை நுண்ணறிவு, அறிவாற்றல் மாடலிங், இயற்கை மொழி பிரதிநிதித்துவம் மற்றும் குறியீட்டு நிரலாக்க மொழிகள்” ஆகிய துறையில் பணியாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெஸ்லர் ஜெராக்ஸ் பற்றிய ஆராய்ச்சி செய்த ஊழியர்களில் ஒரு பகுதியாக இருந்தபோது மாடலெஸ் எடிட்டிங் மற்றும் கட், காபி மற்றும் பேஸ்ட் கண்டுபிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மற்றொரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்றால், தேடுவதற்கு முன்பும் பின்பும் திருத்தக்கூடிய ஒரு வடிவத்தில் உரையைத் தட்டச்சு செய்ய அல்லது பேஸ்ட் செய்வதைக் கண்டுபிடித்து மாற்றும் திறனை அவர் கண்டுபிடித்தார்.
டெஸ்லரின் வலைதளத்தில், ஜெராக்ஸில் அவருடைய பிற பங்களிப்புகளாக பிற்கால பேஜ்மேக்கர் மற்றும் நோட்டேட்டர் எனப்படும் முதல் லக்கேபிள் கணினியின் வன்பொருள் வடிவமைப்பைப் போன்ற ஒரு பக்க தளவமைப்பு அமைப்பை முன்மாதிரியாக செய்தது ஆகியவை அடங்கும்.
The inventor of cut/copy & paste, find & replace, and more was former Xerox researcher Larry Tesler. Your workday is easier thanks to his revolutionary ideas. Larry passed away Monday, so please join us in celebrating him. Photo credit: Yahoo CC-By-2.0 https://t.co/MXijSIMgoA pic.twitter.com/kXfLFuOlon
— Xerox (@Xerox) February 19, 2020
ஜெராக்ஸ் டுவிட்டரில், டெஸ்லரை நினைவுகூரும் ஒரு ட்வீட்டையும் வெளியிட்டுள்ளது. அதில், “கட்/ காபி, பேஸ்ட் கண்டுபிடித்தவர், மேலும், அதில் மாற்றம் செய்வது உள்பட பலவற்றைக் கண்டுபிடித்தவர். முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் ஆவார். அவரது புரட்சிகர கருத்துக்களால் உங்களுடைய வேலை நாள் எளிதாகியிருப்பதற்கு நன்றி. லேரி டெஸ்லர் திங்கள்கிழமை காலமானார். எனவே அவரை கொண்டாடுவதில் எங்களுடன் இணையுங்கள்” என்று டுவிட் செய்துள்ளது.
லேரி டெஸ்லரின் பங்களிப்புகள் ஜெராக்ஸுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. 1980 முதல் 1997 வரை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த அவர், துணை தலைவராகவும் (வி.பி) தலைமை விஞ்ஞானியாகவும் இருந்து அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவர் பொறியியல் துறையில் பிரிவு மேலாளராகத் தொடங்கினாலும், 1986 முதல் 1990 வரை ஆப்பிளின் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான வி.பி. மற்றும் 1990 முதல் 1993 வரை நியூட்டனுக்கான வி.பி.யாகவும் இருந்தார்.
ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த காலத்தில், லிசா, மேகிண்டோஷ், கலர் குவிக்டிரா, குவிக்டைம், ஆப்பிள்ஸ்கிரிப்ட், ஹைபர்கார்டு மற்றும் நியூட்டன் போன்ற தயாரிப்புகளில் பணியாற்றினார். மேலும் பல காப்புரிமைகளுக்கும் அவர் பங்களித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.