/indian-express-tamil/media/media_files/zKsIUepTM2fJbaKjKxzT.jpg)
நீங்கள் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம்.
Samsung Galaxy S23 Ultra - ரூ.75,999
ரூ.80,000 விலையில் கிடைக்க கூடிய சிறந்த ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். தொடர்ச்சியான மென்பொருள் அப்டேட்களுடன் இது அனைத்து Galaxy AI அம்சங்களையும் பெற்றுள்ளது.
Curved டிஸ்ப்ளே கொண்ட இந்த சாம்சங் ஃபிளாக்ஷிப்பை போன் quad-camera செட்அப் 10x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஜூம் லென்ஸ், 8K தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களை எடுக்கக்கூடிய 200MP முதன்மை கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட 2K தெளிவுத்திறன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
ஜியோமி 14 - ரூ.47,999
புதிய காம்பாக்ட் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்பைத் தேடும் எவருக்கும், Xiaomi 14 ஒரு சிறந்த தேர்வாகும், குறிப்பாக அதன் விலை ரூ.47,999 மட்டுமே ஆகும்.
ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது, இது கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவை விட அதிக திறன் கொண்டது, இது லைகா-டியூன் செய்யப்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 6.36 இன்ச் திரை என்பது 2024 ஆம் ஆண்டில் கருத்தில் கொள்ள வேண்டிய மிகச் சிறிய ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.
ஐபோன் 15 - ரூ. 58,999
ஐபோன் 15 ஆப்பிள் நுண்ணறிவு தவிர தற்போதைய ஐபோன் 16-ல் உள்ள அனைத்து சலுகைகளையும் கொண்டுள்ளது. USB-C சார்ஜிங் போர்ட் மற்றும் 48MP பிரைமரி கேமராவுடன், இது கிட்டத்தட்ட சமீபத்திய iPhone 16 உடன் இணையாக உள்ளது, மேலும் இந்த சாதனம் iPhone 16 ஐப் போலவே டைனமிக் ஐலேண்ட் உடள் கூடிய நவீன காட்சி அமைப்யையும் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.