வீடு, கடை, ஆபீஸ்.. என 24x7 மொபைல் மூலம் கண்காணிக்கும் டாப் 3 சிசிடிவி கேமராக்கள்!

தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் தற்போது பரவலாக வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் தற்போது பரவலாக வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
Top 5 CCTV Camera

வீடு, கடை, ஆபீஸ்.. 24x7 மொபைல் மூலம் கண்காணிக்கும் டாப் 3 சிசிடிவி கேமராக்கள்!

தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் தற்போது பரவலாக வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களையும், எளிதில் கண்டுபிடிக்க, உதவும் சிசிடிவியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களையும் சிசிடிவி-யால் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். இந்த கண்காணிப்பு கேமராக்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புக்கு சிசிடிவி மிக முக்கியமானதாகிவிட்டது.

Advertisment

உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், கண்காணிக்கவும் நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏற்ற 3 சிறந்த சிசிடிவி கேமராக்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம். இந்த சிசிடிவி கேமராக்களில் AI எச்சரிக்கை, மோஷன் டிடெக்ஷன், நைட் விஷன், தொலைநிலை அணுகல் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற ஸ்மார்ட் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 360 டிகிரி காட்சியையும் பார்க்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தும் கூட இந்த கேமராக்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

1. கேமேட் டைட்டன் 3MP 4G வயர்லெஸ் சிசிடிவி கேமரா:

அலுவலகத்திற்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும், கட்டுமான தளங்களுக்கும் பயன்படுத்தப்படும் கேமரா. இது 4G சிம் கார்டு இணைப்புடன் இயங்கக் கூடியது, அதாவது வைஃபை இல்லாத இடங்களிலும் பயன்படுத்தலாம். 3 மெகாபிக்சல் (3MP) தெளிவானப் படங்களை வழங்குகிறது.

Advertisment
Advertisements

Wi-Fi வசதி இல்லாத இடங்களில் 4G சிம் கார்டு மூலம் இணையத்துடன் இணைக்கலாம். Waterproof மற்றும் Weatherproof கொண்டது. கேமரா மூலம் பேசவும் கேட்கவும் முடியும். அசைவுகளைக் கண்டறிந்து எச்சரிக்கைகளை அனுப்பும். மோஷன் டிடெக்ஷன், 256 GB வரை SD கார்டை ஆதரிக்கும். கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இந்தக் கேமரா பொதுவாக அமேசான், ஜியோமார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலான விலையில் கிடைக்கிறது.

2. கேமேட் ஹைப்ரிட் 3MP ஸ்மார்ட் சிசிடிவி கேமரா: வீட்டுக் கண்காணிப்பு, குழந்தை, செல்லப்பிராணிகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் Indoor சிசிடிவி கேமரா. "ஹைப்ரிட்" என்றால் 4G சிம் கார்டு மற்றும் Wi-Fi ஆகிய இரு இணைப்புகளையும் ஆதரிக்கும்.  3 மெகாபிக்சல் (3MP) தெளிவான HD வீடியோ வழங்குகிறது. வைஃபை இல்லாத இடங்களிலும் 4G சிம் கார்டு மூலம் இணைக்க முடியும்.

வைஃபை இணைப்பு மூலமும் செயல்படும். PTZ (Pan-Tilt-Zoom) கேமரா வகையைச் சேர்ந்தது, அதாவது கிடைமட்டமாக 360 டிகிரி மற்றும் செங்குத்தாக சுழன்று முழுமையான கண்காணிப்பு காட்சியை வழங்க முடியும். கேமரா மூலம் பேசவும், கேட்கவும் முடியும். இதன் மூலம் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் அல்லது செல்லப்பிராணிகளுடன் தொடர்பு கொள்ளலாம். இருண்ட சூழலிலும் தெளிவாகப் பார்க்க முடியும். அசைவுகளைக் கண்டறிந்து உங்கள் மொபைல் போனுக்கு எச்சரிக்கைகளை (alerts) அனுப்பும். அமேசான், ஜியோமார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையிலான விலையில் கிடைக்கிறது.

3. EZVIZ Hikvision 2K 4G Pan & Tilt Smart CCTV கேமரா: வெளிப்புற பயன்பாட்டிற்கான மேம்பட்ட கண்காணிப்பு கேமரா ஆகும், இது 4G இணைப்பு, 2K தெளிவுத்திறன் மற்றும் Pan & Tilt அம்சங்களுடன் வருகிறது. இது 2304 x 1296 (அல்லது அதற்கு சமமான) பிக்சல் தெளிவுத்திறனுடன் கூடிய வீடியோவை வழங்குகிறது, இது தெளிவான மற்றும் துல்லியமான காட்சிகளைப் பெற உதவுகிறது.  

Wi-Fi இல்லாத தொலைதூர இடங்கள், கட்டுமான தளங்கள், வயல்வெளிகள் அல்லது வேறு எந்த இணைய வசதியற்ற பகுதிகளிலும் இந்த கேமராவை பயன்படுத்தலாம். ஒரு 4G சிம் கார்டு (Nano SIM) மற்றும் டேட்டா பிளான் தேவை.  கிடைமட்டமாக (Pan) 350° வரையும், செங்குத்தாக (Tilt) 80° வரையும் சுழற்றி, பெரிய பகுதியை கண்காணிக்கலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறியும். இது ரூ.3,500 முதல் ரூ.7,700 வரையில் சலுகைகளில் கிடைக்கிறது. EB8 2K போன்ற சில மாடல்களின் விலை ரூ.12,500 வரையிலும் இருக்கும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: