லாவா அக்னி-2 (Lava Agni 2) 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனைத் தேடுபவர்கள் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
இந்தப் போன் மே 24ஆம் தேதி முதல் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.21,999 ஆகும். சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடியும் கிடைக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.19999 முதல் கிடைக்கின்றன. 6.78 இன்ஞ் அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 1080×2400 pixels ரிசொல்சன்ஸ் கொண்டதாகும்.
மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாகும். தெளிவான கேமராக்களை கொண்டுள்ள இந்தப் போன்கள் 4700mAh பேட்டரி வசதியையும் கொண்டதாகும்.
ஆக பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள தேடும் நபர்களுக்கு இது உகந்ததாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“