பட்ஜெட் கிங்: 5,000mAh பேட்டரி, 6GB ரேம் வசதி... ரூ.5,000 விலையில் லாவா போல்ட் என்-1 லைட்!

லாவா நிறுவனம், பட்ஜெட் விலையில் போல்ட் என்1 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசானில் ரூ. 5,698 என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் (15% தள்ளுபடிக்குப் பிறகு) விற்பனைக்கு வந்துள்ளது.

லாவா நிறுவனம், பட்ஜெட் விலையில் போல்ட் என்1 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசானில் ரூ. 5,698 என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் (15% தள்ளுபடிக்குப் பிறகு) விற்பனைக்கு வந்துள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Lava Bold N1 5G

பட்ஜெட் கிங்: 5,000mAh பேட்டரி, 6GB ரேம் வசதி... அம்சங்களில் அசத்தும் லாவா போல்ட் என்-1 லைட்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், குறைந்த விலையில் அதிரடி அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில், லாவா நிறுவனம் தனது புதிய மாடலான போல்ட் என்-1 லைட்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. புது ஸ்மார்ட்போன் வாங்க பட்ஜெட்டில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, இந்தப்போன் தற்போது அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது, 15% டிஸ்கவுண்ட் பிறகு வெறும் ரூ.5,698 என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் இந்த ஸ்மார்ட்போனை நீங்க வாங்கலாம்.

Advertisment

அம்சங்களில் அசத்தும் Bold N1 Lite

இந்த பட்ஜெட் போனில் லாவா நிறுவனம் கொடுத்திருக்கும் முக்கியச் சிறப்பம்சங்களில் கவனிக்கத்தக்கவை, மூவி மற்றும் வீடியோக்களைப் பார்க்க வசதியாக 6.75-இன்ச் HD+ டிஸ்பிளே இதில் கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்கப் பின்னால் 13 மெகாபிக்சல் ஏ.ஐ டூயல் ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் அடங்கும். இந்த போனின் மிகப்பெரிய பலமே அதன் 5,000mAh பேட்டரி திறன் ஆகும். இந்த பேட்டரி நீண்ட நேரம் நீடித்து உழைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளில் மிக முக்கியமானது அதன் இயங்குதளம் தான். இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Android 15 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. இதன் மூலம், அதிநவீன ஆண்ட்ராய்டு அனுபவத்தை மிகக் குறைந்த விலையில் பெற முடியும். செயல்திறனுக்காக, இதில் ஒரு ஆக்டா-கோர் UniSoc செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் அடிப்படையில் 3GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. மேலும், தேவைப்பட்டால் இதை 6GB வரை விர்ச்சுவல் ரேம் வசதியைப் பயன்படுத்தி விரிவாக்க முடியும்.

லாவா Bold N1 Lite ஸ்மார்ட்போன் Crystal Blue மற்றும் Crystal Gold ஆகிய இரண்டு துள்ளலான வண்ணங்களில் கிடைக்கிறது. இது தூசி மற்றும் நீர் துளிகளிலிருந்து பாதுகாக்க IP54 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்காகப் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் (Rear Fingerprint Scanner) மற்றும் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சங்களையும் இது கொண்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன், பண்டிகைக் காலப் பரிசாகப் புதிய போன் வாங்க விரும்புவோருக்கு Lava Bold N1 Lite ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisment
Advertisements
Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: