/indian-express-tamil/media/media_files/2025/08/21/lava-probuds-aria-911-2025-08-21-21-56-31.jpg)
கேமிங் முதல் மியூசிக் வரை... ரூ.999 விலையில் லாவாவின் 2 புதிய இயர்போன்கள் அறிமுகம்!
லாவா நிறுவனம், அதன் புதிய ஆடியோ சாதனங்களான ப்ரோபட்ஸ் ஏரியா 911 (Lava Probuds Aria 911) ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களையும், ப்ரோபட்ஸ் வேவ் 921 (ProbudsWave 921) நெக்பேண்ட்-ஸ்டைல் இயர்போன்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 2 மாடல்களும் தேவையில்லாத சத்தத்தை குறைக்கும் 'என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC)' தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அத்துடன், கேமிங்கிற்காக, 50 மில்லிசெகண்ட்ஸ் குறைந்த தாமதத்தையும் (low latency) கொண்டுள்ளன
ப்ரோபட்ஸ் ஏரியா 911 இயர்பட்ஸ் மற்றும் ப்ரோபட்ஸ் வேவ் 921 நெக்பேண்ட் ஆகியவை தலா ரூ. 999 என்ற அறிமுக விலையில் கிடைக்கும். புதிய இயர்போன்களின் விற்பனை ஆக.25-ம் தேதி முதல், அமேசான் மற்றும் லாவாவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக பிரத்தியேகமாக தொடங்கும்.
லாவா ப்ரோபட்ஸ் ஏரியா 911:
ஸ்டெம்-ஸ்டைல் வடிவமைப்பையும், ஓவல் வடிவ சார்ஜிங் கேஸையும் கொண்டுள்ளது. IPX4-மதிப்பீட்டுடன், வியர்வை மற்றும் லேசான நீர்த் திவலைகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. இதில் 35ms குறைந்த லேட்டன்சி மோட் உள்ளது. முழு சார்ஜில், 35 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். 10 நிமிட சார்ஜிங்கில் 150 நிமிடங்கள் வரை பயன்படுத்தும் 'ஃபாஸ்ட் சார்ஜிங்' வசதியும் இதில் உள்ளது.
லாவா ப்ரோபட்ஸ் வேவ் 921:
இந்த நெக்பேண்டில், நீண்ட நேரம் பயன்படுத்த ஏற்ற, சிலிகான் பாடி உள்ளது. இது IPX6-மதிப்பீட்டுடன், நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் வகையில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 50ms லேட்டன்சி உள்ளது. முழு சார்ஜில் 40 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். 10 நிமிட சார்ஜிங்கில் 12 மணிநேரம் பயன்படுத்தும் 'ஃபாஸ்ட் சார்ஜிங்' வசதி இதில் உள்ளது. 'மேக்னடிக் ஸ்மார்ட் டேஷ்' ஸ்விட்ச் மூலம் காந்த இயர்பட்ஸ் இணைப்பதன் மூலம் அழைப்புகள் மற்றும் மீடியாக்களைக் கட்டுப்படுத்தலாம். இது 2 டிவைஸ்களை ஒரே நேரத்தில் இணைக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
2 மாடல்களிலும், இணைப்புக்காக ப்ளூடூத் 5.3-ம், 10மிமீ டிரைவர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் 'ENC' தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால், வாய்ஸ் கால் பேசும்போது வெளிப்புற சத்தங்கள் குறைக்கப்பட்டு, ஆடியோ கால் தரம் மேம்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.