/indian-express-tamil/media/media_files/2025/08/20/lava-play-ultra-2025-08-20-21-34-09.jpg)
ரூ.13,999-ல் 64MP கேமரா, 5000mAh பேட்டரி... ப்ரீ சர்வீஸ்@ஹோம் வசதியுடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி அறிமுகம்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், லாவா நிறுவனம் தனது புதிய மாடலான 'லாவா பிளே அல்ட்ரா'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 7300 பிராஸசருடன் வரும் இந்தப் போன், பட்ஜெட் ரகத்தில் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. மெலிதான வடிவமைப்பு உடன், கைகளுக்குள் அடங்கும் வகையில் இதன் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
ஆர்டிக் ஃப்ராஸ்ட் (Arctic Frost), ஆர்டிக் ஸ்லேட் (Arctic Slate) ஆகிய 2 வண்ணங்களில் போன் கிடைக்கிறது. இது 'ப்ளோட்வேர் (bloatware) இல்லாத', விளம்பரங்கள் இல்லாத சுத்தமான ஆண்ட்ராய்டு 15 அனுபவத்தை வழங்கும் என லாவா உறுதியளித்துள்ளது. மேலும், இந்த போனுக்கு இந்தியா முழுவதும் ப்ரீ சர்வீஸ் அட் ஹோம் (Free Service@Home) வழங்கப்படும் என்றும் லாவா அறிவித்துள்ளது.
லாவா பிளே அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
செயல்திறன்: 2.5 GHz மீடியாடெக் டைமென்சிட்டி 7300 பிராஸசர் (4nm தொழில்நுட்பம்), ஆண்ட்ரூ பென்ச்மார்க் சோதனையில் 7 லட்சத்திற்கும் அதிகமான ஸ்கோர். மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் (MediaTek HyperEngine) தொழில்நுட்பம் மூலம் கேமிங் அனுபவம் 20% அதிக FPS, மேம்பட்ட கிராபிக்ஸ் மற்றும் அதிக மின்சார சேமிப்புடன் சிறப்பாக இருக்கும். ரேம்& ஸ்டோரேஜ் 6GB+6GB அல்லது 8GB+8GB ரேம் விருப்பங்கள். 128GB UFS 3.1 ஸ்டோரேஜ், 1TB வரை அதிகரிக்கலாம்.
டிஸ்ப்ளே:
6.67-இன்ச் பிளாட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு விகிதம் (refresh rate), 16.7 மில்லியன் வண்ணங்கள் மற்றும் 100% DCI-P3 கலர் கம்யூட்டை ஆதரிக்கும். 10-பிங்கர் மல்டி-டச் ஆதரவுடன், கைரேகை படாத 'ஓலியோபோபிக் கோட்டிங்' (oleophobic coating) உள்ளது. 1000 நிட்ஸ் (nits) பிரகாசம் கொண்டது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
கேமரா:
பின்புறத்தில் 64MP சோனி IMX682 பிரதான சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் கொண்ட டூயல் கேமரா அமைப்பு. முன்புறத்தில் 13MP செல்ஃபி கேமரா. நைட் மோட், HDR, பனோரமா, போர்ட்ரெய்ட், ப்ரோ மோட், ஸ்லோ மோஷன், டூயல் வியூ வீடியோ, கியூஆர் கோடு ஸ்கேனிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
பேட்டரி மற்றும் இணைப்பு:
5,000mAh லி-பாலிமர் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 83 நிமிடங்களில் 0-100% சார்ஜ் ஆகும். 45 மணிநேரம் வரை பேசும் நேரம், 510 மணிநேரம் காத்திருப்பு நேரம் மற்றும் சுமார் 650 நிமிடங்கள் யூடியூப் வீடியோ பார்க்கும் நேரத்தை வழங்குகிறது. டூயல் சிம் (5G + 5G) ஆதரவு. Wi-Fi 6, புளூடூத் 5.2, OTG மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.
லாவா பிளே அல்ட்ரா ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 25 முதல் அமேசானில் விற்பனைக்கு வரும். இந்த போனுக்கு 2 வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட் மற்றும் 3 வருட பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதாக லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.