Lava tamil news Lava Z61 Pro made in india mobile phone Lava Z61 Pro price features- லாவா போன்கள், மேட் இன் இண்டியா
Lava Z61 Pro Price: இந்தியாவில் வடிவமைப்பு “Design in India” என்ற போட்டியை அறிவித்த சில நாட்களிலேயே உள்ளூர் பிராண்டான Lava ஒரு ஆரம்ப நிலை கைபேசியை Z61 Pro என்ற பெயரில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்ப்பார்த்தது போலவே Lava அந்த மாடல் கைபேசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதையும் அதன் மலிவு விலையையும் உயர்த்தி காட்டுகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Lava Z61 Pro கைபேசியின் விலை ரூபாய் 5,774/- மேலும் இந்த கைபேசி Flipkart, Amazon India போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களிலும் offlineல் சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
Advertisment
ஏற்கனவே குறிப்பிட்டது போல Lava Z61 Pro முற்றிலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு ஆரம்ப நிலை கைபேசி. இந்த கைபேசி இரண்டு வண்ணங்களில் Midnight Blue மற்றும் Amber Red ஆகியவற்றில் வருகிறது. இந்த கைபேசியில் 18:9 aspect ratio உடன்கூடிய 5.45-inch 720p+ or HD+ டிஸ்ப்ளே உள்ளது. Lava Z61 Pro கைபேசியில் குறிப்பிடப்படாத 1.6GHz திறன் உள்ள octa-core processor, 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு (storage) வசதி உள்ளது. மேலும் சேமிப்பு அளவை 128GB வரை விரிவுப்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.
Lava Z61 Pro price features- லாவா போன்கள்
Advertisment
Advertisements
கேமராவை பொருத்தவரை Lava Z61 Pro கைபேசியில் 8MP பின்பக்க கேமரா மற்றும் 5MP முன்பக்கம் பார்க்கும் விதத்திலான கேமரா ஆகியவை உள்ளது.
இரண்டு SIM போடும் வசதியுடன் வரும் இந்த கைபேசியில் 3,100mAh பேட்டரி மற்றும் micro-USB மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
Z61 Pro கைபேசியின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் (specifications) உங்கள் மனம் கவர்ந்ததாக இல்லாமல் போகலாம், ஆனால் இந்தியா முழுவதும் வீசும் சீன தயாரிப்புகளுக்கு எதிரான தற்போதைய உணர்வு அலையை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது தயாரிப்பை விற்பனை செய்ய Lava முயல்கிறது.
இந்தியாவின் அடுத்த ஸ்மார்ட் கைபேசியை வடிவமைப்பதற்கு உதவுவதற்காக தனது “Design in India” போட்டியின் மூலம் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் அவர்களது புதிய படைப்புகளை பெற்று அதை பதிவு செய்யும் பணியை Lava சமீபத்தில் தொடங்கியது. இந்த போட்டி ideation, creating a prototype, மற்றும் presentation to the jury என மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் B.Tech, B.E, B.Des, M.Des மற்றும் ECE, IT, CS, Mech, and Industrial Design துறை பொறியியல் professionals கலந்துக் கொள்ளலாம். வெற்றிபெரும் போட்டியாளர்களுக்கு ரூபாய் 50,000/- ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil