/indian-express-tamil/media/media_files/2025/09/06/lava-yuva-smart-2-2025-09-06-19-14-53.jpg)
ஆன்ட்ராய்டு 15 கோ, பேஸ் அன்லாக், 5000mAh பேட்டரி... ரூ.6,000 பட்ஜெட்டில் அசத்தும் லாவா!
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா (Lava), தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன் வரிசையான 'யுவா ஸ்மார்ட்' பிரிவில் புதிய மாடலாக யுவா ஸ்மார்ட் 2 (Yuva Smart 2)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. UNISOC SC9863A பிராசஸர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன், Android 15 Go பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. 6.75-இன்ச் HD+ திரை மற்றும் 5000mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் வாங்குபவர்களுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய யுவா ஸ்மார்ட் 2, அறிமுக விலையாக ரூ.6,099-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்ஃபோன் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் யுவா ஸ்மார்ட் 2 வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே சென்று இலவச சர்வீஸ் வழங்குவதாக லாவா உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் கிரிஸ்டல் ப்ளூ (Crystal Blue), கிரிஸ்டல் கோல்ட் (Crystal Gold) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
லாவா யுவா ஸ்மார்ட் 2, 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது UNISOC 9863A பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக, விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் 3ஜிபி ரேமை விரிவாக்கிக்கொள்ள முடியும். 5000mAh பேட்டரியுடன் வரும் இந்த போன், 10W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சார்ஜிங் போர்ட் USB-C ஆகும். இந்த ஸ்மார்ட்ஃபோன் பின்புறத்தில் ஸ்டைலான கேமரா பேனல் மற்றும் கிளாஸ் பேக் டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்கு, இதில் 13MP முதன்மை சென்சார் கொண்ட டூயல் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்காக, முன்புறத்தில் 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் HDR, பியூட்டி மற்றும் நைட் மோட் போன்ற பல்வேறு கேமரா மோட்களும் உள்ளன. Android 15 Go Edition இயங்குதளத்தில் இயங்குவதால், தேவையற்ற செயலிகள் (bloatware) இல்லாத அனுபவத்தை வழங்குகிறது. மேலும், பாதுகாப்பு அம்சங்களுக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியும் இதில் உள்ளது.
டிஸ்ப்ளே: 6.75-இன்ச் HD+, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
பிராசஸர்: UNISOC 9863A
ரேம்: 3ஜிபி + 3ஜிபி (விர்ச்சுவல்)
ஸ்டோரேஜ்: 64ஜிபி
பின்புற கேமரா: 13MP
முன்புற கேமரா: 5MP
பேட்டரி: 5000mAh
சார்ஜிங்: டைப்-சி போர்ட், 10W
இயங்குதளம்: Android 15 Go Edition
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.