/indian-express-tamil/media/media_files/2025/08/13/lenovo-ideatab-2025-08-13-21-35-24.jpg)
ரூ.10,999 விலையில் ஏ.ஐ. வசதியுடன் 5ஜி டேப்லெட்: லெனோவாவின் 2 புதிய பட்ஜெட் டேப்லெட்டுகள் அறிமுகம்!
லெனோவா நிறுவனம் இந்தியாவில் லெனோவா ஐடியாடாப் (Lenovo IdeaTab) மற்றும் லெனோவா டேப் (Lenovo Tab) ஆகிய 2 புதிய பட்ஜெட் டேப்லெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.10,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை விரும்புவோருக்கு ஏற்றது. சிறந்த செயல்திறன், உற்பத்தித்திறன், மல்டிமீடியா அனுபவங்களை பயனர்களுக்கு வழங்கும்.
லெனோவா ஐடியாடாப் (Lenovo IdeaTab)
லெனோவா ஐடியாடேப் ஆனது, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பிராஸசர் மற்றும் 8ஜிபி ரேம் (RAM), 256ஜிபி உள்ளடக்க சேமிப்பகத்துடன் (internal storage) வருகிறது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 11-இன்ச் 2.5K டிஸ்பிளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate) உள்ளது. மேலும் 7,040mAh பேட்டரி மற்றும் 5ஜி இணைப்பு வசதி (optional 5G connectivity) பயணத்தின்போது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது.
லெனோவா, இந்த டேப்லெட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கருவிகளையும் (tools) இணைத்துள்ளது. இதில், குறிப்புகள் எடுப்பதற்கும், ஆவணங்களில் உள்ள முக்கியப் பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் எளிதாக்கும் வகையில் லெனோவா ஏஐ நோட்ஸ் (Lenovo AI Notes) மற்றும் கூகிளின் ஏஐ மூலம் இயங்கும் “சர்க்கிள் டூ சர்ச் (circle to search)” போன்ற அம்சங்கள் உள்ளன.
லெனோவா டேப் (Lenovo Tab)
அன்றாட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட லெனோவா டேப் (Lenovo Tab), 10.1-இன்ச் FHD டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் TÜV ரைன்லேண்ட் (TÜV Rheinland) சான்றிதழ் இருப்பதால், கண்களுக்கு ஏற்படும் சிரமம் குறையும். மேலும், டூயல் டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்குகின்றன. மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 chipset) மூலம் இயங்கும் இந்த டேப்லெட்டில், 60Hz புதுப்பிப்பு வீதம், 5,100mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் ஆகியவை உள்ளன. லெனோவா, இந்த சாதனத்திற்கு 2 ஓஎஸ் மேம்படுத்தல்களையும் (OS upgrades), 4 வருட பாதுகாப்பு மேம்படுத்தல்களையும் (security updates) வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த டேப்லெட்டுடன் தெளிவான கிக்ஸ்டாண்ட் (kickstand) கொண்ட கேஸ் (case) வழங்கப்படுகிறது. இதன் மூலம் இதை டிஜிட்டல் ஃபோட்டோ ஃபிரேம் அல்லது ஸ்டான்ட்பை மோடில் கடிகாரமாகவும் பயன்படுத்தலாம். இந்த டேப்லெட்டில் ஒருநாள் முழுதும் பேட்டரி நீடிக்கும் என்றும், ஸ்டான்ட்பை மோடில் ஒரு மாதம் வரையில் சார்ஜ் நிற்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த 2 டேப்லெட்டுகளும் லெனோவாவின் இணையதளம், லெனோவா ஷோரூம்கள் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.