6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்... மிஸ் பண்ணிடாதீங்க!

இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன்கலீல் இடம்பெறாத முக்கிய சிறப்பம்சம் லெனோவா எஸ்5-ல்

6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட அசாத்தியமான லெனோவா எஸ்5 ஸ்மார்ட்ஃபோன் அடுத்த வாரம் அறிமுகமாகிறது.

சமீபத்தில் லெனோவா எஸ்5  ஸ்மார்ட்ஃபோன் குறித்த டீசர் ஒன்று வெளியாகியது.  இதன் மூலம், இந்த ஃபோன் குறித்த எதிர்ப்பார்ப்பு ஃபோன் பிரியர்களிடம் அதிகரித்தது. குறிப்பாக இந்த ஸ்லிம் தோற்றம் அதிகளவில் ஈர்த்தது. தற்போது இந்த மொபைல் குறித்த மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 20 ஆம் தேதி இந்த ஃபோன் சீனாவில் அறிமுகமாகிறது. இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன்கலீல் இடம்பெறாத முக்கிய சிறப்பம்சம் லெனோவா எஸ்5-ல் இடம்பெற்றிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லெனோவா பி2 ஸ்மார்ட்போனில் 5100எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருந்தது. தற்போது அதைமிஞ்சும் அளவிற்கு லெனோவா எஸ்5 ஸ்மார்ட்ஃபோனில் 6000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

கடந்த 2015-ல் வெளியிடப்பட்ட லெனோவா வைப் எஸ்1 ஸ்மார்ட்போனின் அப்டேடட் ஸ்மார்ட்போன் தான் இந்த லெனோவா எஸ்5 என்ற தகவலும் இணையத்தில் வெளிவந்துள்ளது. வைப் எஸ்1 ஃபோனில் இரட்டை செலிஃபீ கேமரா இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவைத் தொடர்ந்து மிக விரைவில்  லெனோவா எஸ்5  இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.

×Close
×Close