Advertisment

மீண்டும் வருகிறது Slide ஸ்டைல் போன்கள்... நவம்பர் 1ல் அறிமுகம்...

லெனோவோ அறிமுகப்படுத்த இருக்கும் போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lenovo Z5 Pro with manual slider display

Lenovo Z5 Pro with manual slider display

Lenovo Z5 Pro with manual slider display : பெரிய பெரிய திரையுடன் ஆண்ட்ராய்ட் போன்கள் வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்த ஸ்லைடர் போன்கள் தான் மிகவும் ஃபேமஸ். எப்படியாவது வாங்கி நண்பர்கள் முன்பு பந்தாவாக நடக்கமாட்டோமா என்று ஏங்கிய நினைவுகள் நம் அனைவரிடத்திலும் இருக்கும்.

Advertisment

காலங்கள் உருண்டோடுகையில் நமக்கு பிடித்த போன்களின் டிசைன்கள் எல்லாம் மாறிவிடும். பிளாக்பெர்ரியின் கீபோர்ட் டைப் போன்கள் என்றால் இன்றும் அத்தனை க்ரேஸ் இருக்கும் மக்கள்.

சாம்சங் நிறுவனத்தின் 2019ம் ஆண்டிற்கான  திட்டமென்ன ?

அப்படி தான் இந்த ஸ்லைடர் ஸ்டைல் போன்கள்... அவுட் ஆஃப் பேஷன் என்பதை மாற்றி, இப்போது மீண்டும் ட்ரெண்டாக வருகிறது. புதிதாக வரும் ஸ்லைடர் போனை அறிமுகப்படுத்த உள்ளது லெனோவா நிறுவனம். நவம்பர் 1ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாக வெய்போ என்ற சீன சமூக வலைதளத்தில் தகவல் அளித்துள்ளது லெனோவோ.

Lenovo Z5 Pro with manual slider display சிறப்பம்சங்கள்

  1. 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி திரை கொண்டிருக்கும் போன்
  2. ரெசலியூசன் 2246 x 1080 ஆகும்
  3. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 636 ப்ரோசஸ்ஸர் இந்த போனை இயக்க உள்ளது.
  4. கிராபிக்ஸ் ப்ரோசசிங் யூனிட் Adreno 509 GPU ஆகும்
  5. இந்த போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரியின் சேமிப்புத் திறன் 3,300mAh
  6. 6GB RAM உடன் கூடிய 64ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியண்ட்டுகளுடன் வெளிவர உள்ளது
  7. இரண்டு கேமராக்கள் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டும் 16 எம்.பி. செயல் திறன் கொண்டவை. செல்பி கேமரா 8 எம்.பியாகும்.
Lenovo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment