எல்ஜி நிறுவனத்தின் அடுத்த வரவான எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்ஃபோன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஃபோன் பிரியர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள தென் கொரிய உற்பத்தியாளரான எல்ஜி நிறுவனம், தனது அடுத்த தலைமை மாடலான எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்ஃபோனை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. எனவே, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற்றவுள்ள எம்டபள்யுசி-2018 நிகழ்ச்சியில், இந்த மாடல் வெளியிடப்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாடல் ஃபோன், வெளிப்புற அமைப்புக்கு அதிகளவில் முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/LG-G6-2-300x217.jpg)
4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி கொண்ட எல்ஜி ஜி6 லைட் ஃபோனின் விலை 25,000 ரூபாய் வரையிலும் இருக்கலாம். அத்துடன், எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. ஆன்ராய்ட் இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வெளிவருகிறது.
மொபைல் பயனாளர்களுக்கு நாளுக்கு நாள் ஸ்மார்ட்ஃபோன்களின் மீது ஏற்படும் ஈர்ப்பு காரணமாக, பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில், ஸ்மார்ஃபோன்கள் தயாரிப்பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் யுக்தியை கையாளுகின்றன. அந்த வகையில், எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்ஃபோன் மொபைல் பிரியர்களிடம் புதியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்ஃபோனின் முக்கிய அம்சங்கள்:
* 1080 பிக்சல்
*18:9 அஸ்பேட் ரேட்ஷியோ
*821 ஸ்னாப்டிராகன்
*13எம்பி டூயல் ரியர் மெகா கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
*5 மெகாபிக்சல் முன்புற கேமரா
*எல்இடி ஃபிளாஷ்