How to Link Pan Card to Aadhar Card Online : உங்களின் ஆதார் கார்டுடன் பேன் கார்டு இணைக்க சில நாட்களே உள்ளது. இணையத்தின் மூலம் ஆன்லைனிலேயே சுலபமாக இணைக்கலாம்
ஆதார் அட்டையுடன் பேன் அட்டையின் எண்ணை இணைக்காதவர்களுக்கு மார்ச் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஆதாருடன் பேன் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த உச்சநீதிமன்றம், பின்னர் ஆதாருடன் பேன் இணைப்பது அவசியம் என்று உத்தரவிட்டது.
Link Pan Card to Aadhar Card Online : ஆதார் அட்டையுடன் பேன் கார்டு இணைப்பு
இப்போது உங்களின் ஆதார் கார்டை பேன் கார்டுடன் இணைக்க வெறும் 10 நாட்களே உள்ளது. இந்நிலையில் இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம்.
-
- முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லுங்கள். அதில் ஆதாரையும் பேன் கார்டையும் இணைக்கும் ஆப்ஷனுக்கு செல்லவும்
- அதில் பேன் எண் மற்றும் ஆதார் எண் பதிவிடவும்.
- உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் அதே பெயரை பதிவிடவும்
- ஒருவேளை உங்கள் ஆதார் எண்ணில் பிறந்த வருடம் மட்டுமே இருந்தால் டிக் பட்டனை கொடுக்கவும்
- கேப்சா கோட் ஒன்று தோன்றும். அதை டைப் செய்யவும்
- பின்னர் லிங்க் ஆதார் என்று கொடுக்கவும்.
அவ்வளவு தான் உங்களில் பேன் ஆட்டையும் ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டது.