இந்தியாவில் ஆதார், பான் அட்டை இரண்டும் மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக பான் அட்டை வங்கிப் பரிவர்த்தனை பயன்பாடுகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு பல முறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், கடந்தாண்டு ஜுன் மாதம் இறுதி வாய்ப்பு வழங்கியது. ரூ.1000 அபராதத்துடன் ஆதார் எண்ணுடன் பான் இணைப்பு செய்ய கால அவகாசம் வழங்கியது.
கடந்தாண்டு ஜுன் 30-ம் தேதி உடன் இந்த அவகாசம் முடிந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை வழங்கியுள்ளது. அதில், வரி செலுத்துவோர் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அதிக வரிப் பிடித்தம் செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள பதிவில், வரி செலுத்துபவர்கள் தங்களின் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை வருகிற 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இணைக்க தவறும்பட்சத்தில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வரி தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 31ம் தேதியாகும்.
அதிக வரிப் பிடித்தம் செய்வதில் இருந்து தவிர்க்க வரும் 31, மே 31, 2024-க்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் (டி.டி.எஸ் பிடித்தம் அதிகம் செய்யப்படும்) என்று தெரிவித்துள்ளது.
இதுவரை பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உடனடியாக வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கம் சென்று இணைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“